முக்கிய நகரத்தை இழந்தது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு.!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தின் முக்கிய நகரப் பகுதியை அந்நாட்டு அரச கூட்டுப்படை மீட்டுள்ளது.

சிரியப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலிலேயே இட்லிப் மாகாணத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹூலாத் அல் மடிஹ் (Qalaat al-Madiq) என்ற நகரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிரியாவில் அரச படைகளுக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரச கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக் கணக்கானோர் வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Updated: May 10, 2019 — 5:53 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *