வீடு வீடாகக் குடும்பங்களின் விவரம் திரட்டும் இராணுவம்

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரும் பொலிஸாரும், இணைந்து வீடு வீடாகத் தேடுதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். அத்துடன், வீடுகளின் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும், அடையாள அட்டை தொடர்பான பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினா இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வல்வெட்டித்துறையில் நிலை கொண்டுள்ள முதலாவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 521 ஆவது படையணியின் இராணுவத்தினர் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு அச்சுவேலிப் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை திரட்டல் மற்றும் அடையாள அட்டை பதிவுகள் என்பனவும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், பதிவுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updated: May 11, 2019 — 5:59 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *