தமிழினப்படுகொலை நினைவேந்தல் இன்று ஆரம்பமாகியது.!

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

*ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

*தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் 18 5 2019

*தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும்.

* கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி விசாரணை செய்

*தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்

*ஆயுதப்படைகளே எமது காணிகளை விட்டு வெளியேறு

*பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெறு

* ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து

* தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்து உள்ளிட்ட கோரிக்கைகளோடு

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Updated: May 13, 2019 — 9:33 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *