படையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் !

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாகப்பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு 13.05.19 மாலை படையினர்மற்றும் பொலீசாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் தீர்;தம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலத்யதில் இருந்து தீர்த்தம் எடுப்பதற்காக புறப்பட்டு சிலாவத்தை ஊடகா தீர்த்தக்கரையினை சென்றடைந்து அங்கு அம்மனில் அருளால் தீர்த்தம் எடுக்கப்பட்டு வீதிகளில் பக்தர்களின் நேர்த்திக்கான சிதறுதேங்காய் அடித்து தீர்த்தக்குடம் முள்ளியவளை காட்டுவினாயகர் ஆலயத்தினை சென்றடைந்து அங்கு சிறப்பு பூசைகள் வழிபாடுகளுடன் மடைபரவி பூசைகள் நடைபெறும் இன்றில் இருந்து ஏழு நாட்கள் அடுத்த ஞாயிற்று கிழமை வரை உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சியினை முள்ளியவளை காட்டுவினாயகர் ஆலயத்தில் காணலாம்.
 
இன்று தீர்த்தம் எடுக்கும் நிகழ்விற்காக படையினர் மற்றும் பொலீசார் தீர்த்தக்குடத்துடன் பாதுகாப்பு வழங்கி வந்துள்ளதுடன் தீர்த்தக்குடம் செல்லும் வழியில் மக்கள் கூடும் ஆலயங்களிலும் பாதுகாப்பு கடமையில் பொலீசார் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
 
தீர்த்தம் எடுக்க செல்லும் மக்களுக்காக பக்தர்கள் வீதிகளின் இடையில் தாகசாந்தி நிலையங்கள் அமைத்து மக்களின் தாகங்களை போக்கிவந்துள்ளதுடன் மழை இல்லாத காரணத்தால் மாவட்டத்திற்கு மழை கிடைக்கவேண் பலர் தீர்த்தக்குடத்திற்கு சிதறுதேங்காய் அடித்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்துள்ளார்கள்
எதிர்வரும் 19 ஆம் திகதி முள்ளியவளை காட்டுவினாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று 20 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் சிறப்புற நடைபெறும்.
 
கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம்.
 
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
 
பொங்கல் கிரியைகள்
 
* 13/05/2019- மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்படல்
* 13/0/2019 மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில் விளக்கெரிக்கும் தீர்தமெடுத்தல்
* 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைதல்
* 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல்
* 15/05/2019- புதன் மடை
* 17/05/2019- வெள்ளி மடை
* 19/05/2019 – காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம்
* 20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் செல்லல்
* 20/05/2019- கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்
* 20/05/2019- நள்ளிரவு 12:00 வளர்ந்து வைத்து பொங்கல்
* 25/05/2019- பக்தஞானி பொங்கல்
ஆகியவற்றுடன் பொங்கல் கிரியை நிறைவுபெறும்.
Updated: May 14, 2019 — 6:18 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *