முள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .!

நீங்கள் எனது சகோதரியை கற்பழித்து கொலை செய்யலாம் – அவள் மார்பகங்களை உங்கள் சப்பாத்துக்களால் மிதிக்கலாம்.
நீங்கள் எனது தோழர்களின் கைகளை கட்டி அவர்களது நெற்றியில் துப்பாக்கியால் சுடலாம்.

நீங்கள் எங்கள் இளைஞர்களின் கண்களை பிடுங்கி அவர்கள் உடலங்களை தெரு நாய்களுக்கு உணவாக போடலாம்.

உங்கள் போர் விமானங்கள் பாடசாலைகள் மீது குண்டு பொழிந்து எங்கள் சிறுவர்கள் நீங்கள் கொல்லமுடியும்.

பல்லாயிரம் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று புதைத்திருக்கலாம்.

ஆனாலும் நான் சமரசம் செய்யமாட்டேன்,

என் கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவேன்.

நீங்கள் எனது உடலில் காயங்களை ஏற்படுத்தி சித்திரவதை செய்யலாம்.
நீங்கள் உங்கள் இராணுவத்தை என் தேசத்தில் நிலை கொள்ள வைக்கலாம்.
உங்கள் கடவுளை கொண்டு என் வீட்டை நிலத்தை அபகரிக்கலாம்.
நீங்கள் எனது சுதந்திரத்தை பறித்து எனது பேனாவை முறித்தும் எறியலாம்.
என் தேச பொக்கிசமான நூலகத்தை எரித்தும் விடலாம்.
எங்கள் பத்திரிகை நிறுவனங்கள் மீது உங்கள் காடையர்களை ஏவி நாசம் செய்யலாம்.

ஊடகர்களையும் பல ஆயிரம் இளைஞர்களையும் காணாமலாக்கியிருக்கலாம்.

ஆனாலும் நான் சமரசம் செய்யமாட்டேன்,

என் கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவேன்.

நீங்கள் என் மாவீரர்களின் என் தோழர்களின் கல்லறைகளை இடித்து அழித்துவிடலாம் – அவர்களை பயங்கரவாதிகள் என்று வதந்தி பரப்பி நினைவு கூற தடையும் விதிக்கலாம்.
எங்கள் வானமெங்கும் உங்கள் கொடிகளை பறக்கவிடலாம்.
நீங்கள் என் வரலாற்றை திரித்து என் பண்பாட்டை சிதைத்து கொள்ளலாலம்.
என் பிள்ளைகளை நாடற்றவர்களாகவும் ஆக்கலாம்.

என் சந்தோசத்தை, புன்னகையை என் வருங்காலத்தை நான் இழந்து போகலாம்.

என் கண்களில் வலிகளையும் நீங்கள் காணலாம்.

ஆனாலும் நான் சத்தியம் செய்கின்றேன்
ஒருபோதும் சமரசம் செய்யமாட்டேன்.
என் இதயத்தின் கடைசி துடிப்பு வரை எதிர்ப்பேன்.
மீண்டும் எழுவேன்.

உதயராசா சாளின் 

தமிழ் ஊடகவியலாளர்

Updated: May 17, 2019 — 6:05 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *