முள்ளிவாய்க்கால் பெருவலியின் நினைவு நாள் !!

ஈழத்தமிழீனத்தின் தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்த

அறுபது ஆண்டுகளாய் போராடிய இனத்தின் வலி சுமந்த நாள் !

வஞ்சனையாகவும் சர்வதேச இராசதந்திகளின் வஞ்சக

இராசதந்திரங்களினாலும் பல லச்சம் மக்களை

நிராயுதபாணிகளாக்கிய் படுகொலை செய்த நாள் !

தமிழீன மக்களின் நீதி மறுக்கப்பட்டு நீதியினை பறிக்கப்பட்ட நாள் !

மதத்தால் மொழியால் பண்பாட்டல் கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட

ஓர் இனக்குழுமங்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட நாள் மே 18 !

சிறிலங்க என்ற அடையாளம் தரித்த அரசு

மிக மிருகத்தனமாக சர்வதேச நியமங்களை மதிக்காது

சர்வாதிரகமான முறையில் தமிழீனத்தை உயிருடன் புதைத்த நாள் !

சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு

தேசத்தின் நிழல்கள் இனவெறி அரசின்

வெறித்தனமான தாக்குதலில் வாழ்வின் முடிவை எண்ணிய நாள் !

வாழ்க்கையின் வழியிலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலும்

பெரியவர்கள் பெண்கள் சிறார்கள் என ஒர் இனம் சந்திக்கும்

அனைத்துத் துயரங்கள் குவிந்த நாள் மே 18 !

ஈழத்தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க

இடமின்றி, சிறிது நேரம் கூட இளைப்பாற முடியாமல் துரத்தி, துரத்திக்

விமானக் குண்டு வீச்சு, பல்குழல் பீரங்கிகள்,கொத்தனிக் குண்டுகள்

இரசாயனக் குண்டுகளால் உடலங்கள் சீர்ரழித்து சிதறி வீசப்பட்ட நாள் !

இது கதையோ, கற்பனையோ அல்ல எம் இன அழிப்பின் உண்மை

இந்த நூற்றாண்டின் மனித இனப்படு கொலையின் சின்னம் ஆகிய நாள் !

எந்த ஏக்கத்துடன் எமது மாவீரர்களும் பொது மக்களும் மாண்டார்களோ

ஆதை நிறைவேற்றுவதே இன்றைய தமிழ் மக்கள் அவர்களுக்கு செய்யும்

ஆத்மார்த்தமான அஞ்சலி ஆகும்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் !!

தேசியத்தலைவர் வழியில் நாம் போராடி உரிமையை மீட்ப்போம்..

” சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை ”

– தமிழீழ தேசியத்தலைவர் –

Updated: May 18, 2019 — 5:18 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *