தலைமையிலான எமது விடுதலைப் போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று..!!

தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப் போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள் இதனை கண்டித்து லண்டனில் இன்று (24.05.2019) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமது இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Updated: May 24, 2019 — 8:12 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *