சா(தீ)திகளை ஒழித்த தலைவன்….!!

தமிழீழத்திலும்,,தமிழீழத்திற்கு வெளியிலும் தமிழீழ விடுதலை விரும்பிகளுக்கு விடுதலை இயக்கத்தின்பால் இத்தனை நல்லெண்ணமும் நற்பெயரும்,தேசிய தலைவரின் மீது இத்தனை அளவுகடந்த பாசமும் உரிமையும் வரக்காரணம்
விடுதலை இயக்கத்தின் வளர்சியும்,போர்கள சாதனைகளும்,வெற்றிகளும் மட்டுமே காரணமில்லை.

சாதி ஒழிப்பு,பெண்விடுதலை,ஆணுக்குபெண் சரிநிகர் சமானம்,மது,புகை போன்றபோதை வாஸ்த்துகள் ஒழிப்பு,தனிமனித ஒழுக்கம், வரதட்சினை ஒழிப்பு,இவற்றிலும் விடுதலை இயக்கம் சாதித்த சாதனைகளுக்காகவும்தான்.

சாதி ஒழிப்பு,சாதி இரண்டொழிய வேறில்லை,பெண் விடுதலை,ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்றெல்லாம் முழங்குகின்றார்கள்.ஆனால் இதனை தனது ஆளுகை பரப்புக்குள் முற்று முழுதாக சாதியை ஒழித்து சாதித்துக் காட்டியவர் எம் தேசியத்தலைவர்.இத்தனைக்கும் வரலாற்று ரீதியாக ஈழத்தமிழ் சமூகம் அதிலும் யாழ்பாணச் சமூகம் தீவிரமான சாதீய படிநிலைகளை கொண்டதாகவே இருந்து வந்திருக்கின்றது.சமூக பொருளாதர,பண்பாட்டு கல்வி இவற்றில் கீழ்சாதி மக்களின் நிலை மிகவும் பின்தங்கியே நீண்டகாலம் இருந்துவந்துள்ளது.விடுதலை இயக்கம் தோன்றி படிபடியாக வளர்சி அடைந்த காலத்தில் தலைவரால் படிப்படியாக சாதி முற்றிலும் ஒழிக்கப்பட்டது,ஒழித்தார் தலைவர்.

சாதீ தமிழினத்தின் மரபணுவை ஆழப்பிடித்துவிட்ட புற்றுநோய் என்பதை தீர்க்கமாக உணர்ந்த தலைவர் சாதிகளை ஒழித்து மனிதநேயத்தை வளர்பதில் அதிக அக்கரை கொண்டவராக இருந்தார்.விடுதலை அமைப்பில் சாதி பேதம் பார்கபடுவதில்லை,எந்த படிவத்திலும் ஒருவருடைய சாதி பதிவு செய்யபடுவதில்லை,போராளிகள் தங்களுக்குள் சாதியை அறிந்து கொள்வதில் விருப்பம் கொள்ளுவதில்லை,பலருக்கு யார் என்ன சாதி என்பதே தெறியாது அதுபற்றி அவசியமும் ஏற்பட்டதில்லை,சாதியை பற்றி சுய பிரக்ஞைகளே இல்லாதிருந்தார்கள் என்பதே உண்மை.தலைவர் வளர்ப்பு அப்படி. தலைவரின் ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த சாதிய கொடுமை ஒன்று.

உண்மை சம்பவம்.

சாவகச்சேரிக்கு அருகில் கீழ்சாதி மக்கள் என்று அடையாள படுத்தபடுகின்ற சனம் குடிநீர் எடுக்கும் கிணற்றில் உயர்சாதி மக்கள் என்று அடையாள படுத்தபடுகின்ற நபர் ஒருவர் மனித மலத்தை அள்ளிபோட. சம்பவம் விடுதலை அமைப்பின் கவனதிற்கு கொண்டு செல்லபடுகின்றது.இயக்க பொறுப்பாளர் ஒருவர் அவ்விடம் சென்று அவ்வாறு செய்த நபரை அழைத்து வந்து அச்சனத்திடம் மண்ணிப்புகேட்க வைத்து இதற்குமேல் இவ்வாறு நடக்காது என்ற உத்திரவாதத்தையும் அச்சனத்துக்கு தந்தார். இனி இவ்வாறு செய்யகூடாதென்றும் மிக கடுமையாக அந்நபரை எச்சரித்துவிட்டு சென்றார்.ஆனால் அதற்கு அடுத்தநாளும் அந்நபர் அக்கிணற்றில் மீண்டும் மலம் அள்ளிபோட அக்குற்றவாளியை அக்கிணற்றடிக்கு இழுத்து வந்து அக்கிணற்றடியில் வைத்தே மரணதண்டனை நிறைவேற்றபட்டது.இனி இப்படியொரு செயலை செய்ய எவரும் யோசிப்பார்களா அதுதான் தலைவர்.இச்சம்பவதிற்கு பிறகு மேல்சாதி மக்கள் கீழ்சாதி மக்களை கீழ்தரமாக எண்ணும் நிலைமாறியது.மாற்றினார் எம்தலைவர்.

முதல்நாள் அழைத்து அறிவுரை சொல்லி திருந்தி வாழுங்கள் வாழவிடுங்கள் என்று சொல்லியும்.அதற்கு அடுத்தநாளே மீண்டும் அதே பிழையை விடுபவனை அதிலும் சனம் குடிநீர் எடுக்கிற கிணற்றில் மலத்தை அள்ளி போடுகிறவன் மனிதனாக இருக்கமுடியுமா? ஆனாலும் அச்செயலை செய்தவன் மனம் வருந்தி திருந்தி வாழ ஒருவாய்ப்பு கொடுக்கப்பட்டது ஆனால் அவர் திருந்த வாய்பேயில்லை என்னும் நிலைவரும்போது இம்முடிவுதானே சரி.இதைதான் அண்ணை தண்ட பாணியில் சொல்லுகின்றவர் “அன்பா சொல்லி அம்மி நகராது”என்று.
மேலும் தலைவரின் ஆளுகை பரப்புக்குள் சீதன தடை சட்டம் அமலில் இருந்தது.வரதட்சினை வாங்கிகொண்டு திருமணம் செய்வதை தலைவர் உறுதியாக எதிர்த்தார்.போராளிகள் யாரும் சீதனம் வாங்கிகொண்டு திருமணம் செய்திருப்பதாக அறிந்தால் அவரை இயக்கத்தை விட்டே நீக்கியும் வைத்தார்.மது,மாது,புகை,போதை இப்படி தானும் எதற்கும் அடிமையாகாது தன் தம்பிகள்,பிள்ளைகள் யாவரையும் தவறான வழியில் சென்றுவிடாது பாதுகாத்தார்.அதனால்தான் தமிழர் வரலாற்றில் தமிழ் மக்கள் மனங்களில் இதுவரைக்கும் யாரும் எட்ட இயலாத உயரத்தை,ஏன் எவரும் நினைத்துகூட பார்க்க முடியாத உயரத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர்திருக்கிறார் எங்கள் தானைத் தலைவர்,தாயுமானவர்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Updated: May 26, 2019 — 9:41 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *