பத்து வருட மௌனம் போதும் நீதிவேண்டும் – முல்லையில் போராட்டம்..!!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வருகையின் போது வலிந்து காணாமல் ஆக்ப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு முல்லைத்தவில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சிக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு நகப்பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவின் 01 ஆவது படை அணியின் தலைமை அலுவலகத்தில் வந்திறங்கிய பாதுகாப்புடன் காரில் மாங்குளம் முல்லைத்தீவு வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை சென்றடைந்துள்ளார்.

இன்னிiலியல் ஜனாதிபதி பயணம் மேற்கொண்ட வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக நின்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணவினர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.

பத்துவருட மௌனம் போதும் நீதிவேண்டும்,
நாட்டின் ஜனாதிபதியே எம்மை ஏன் கைவிட்டீர்கள்?

இனத்திற்கு ஒரு நீதியா இலங்கை அரசாங்கமே
யார் பதவியில் இருந்தாலும் பொறுப்பு கூறவேண்டும் இலங்கை அரசாங்கம்.

போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அமையினா தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

பொலீசாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் 824 ஆவது நாhளாக போராட்டம் மேற்கொண்டு வரும் வலிந்து காணமர் ஆக்கப்பட்டவாகிள்ன உறவுகள் போராட்ட கோரிக்கையினை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

    

Updated: June 8, 2019 — 8:43 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *