ஒரு மில்லியன் பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற தமிழர்களின் கலாச்சார பெருவிழாவில்..( காணொளி ) !!

தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு…

நேற்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டு தமது அடையாளத்தையும் , பாரம்பரிய கலையையும் வெளிப்படுத்தி தனக்கான தனித்தன்மையை தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் பவனி வந்தனர்.

ஒரு மில்லியன் பார்வையாளர்களின் மத்தியில் ஈழத்தமிழர்கள் பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டாம்,  பாவைக் கூத்து , காவடி , சிலம்பாட்டம் , மாடு ஆட்டம், பறை இசைத்தல் என   தமது   பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர்.

பழமை வாய்ந்த தமிழர் பாரம்பரிய கலைகளை பல்லின மக்கள் ஆர்வமாக பார்வையிட்டதோடு   மட்டும் அல்லாமல் தம்மையும் இணைத்துக்கொண்டு  மகிழ்ச்சியடைந்தனர்….

Updated: June 11, 2019 — 2:41 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *