கார்த்திகைக் காந்தள்…!

உப்புக் கண்ணீர் ஈரத்தில்..
குருதிக் காயாத கறையோடு
முள்ளிவாய்க்காலில்

மூடப்பட்ட.. எம் உறவின்
எலும்புக் கூடுகளின்
வழியாய்..

எழும்புகிறது
எம் மாவீரர்களைப் போலவே
காந்தள் பூ!

இன அழிப்பில் இறந்த காந்தள்
மாவீரர் நாளில் முட்டி முளைத்து
நிமிர்கிறது..

விடுதலை திறப்பின் அடையாளமாய்!
கார்த்திகைப்பனிச்சாரலிலும்
முற்றத்து ஓரங்களிலும்

முன்னிலும் பெரிதாய் சுடர் விடுகிறது
தமிழீழம் நோக்கிய
காந்தள்!

உலகில் வாசனை பரப்பவே
பூத்த பிற பூவெல்லாம்
தலைகுனிந்தது…

தன் மண்ணை வணங்க தலை நிமிரும்
காந்தள் பூவைக் கண்டு
“மாவீரர் நாளில்!

Updated: June 12, 2019 — 3:03 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *