வீடு தேடி வந்த தமிழீழ காவல்துறையின் கடிதம்…!

2006 காலகட்டம் என்று நினைக்கிறேன் கனடா நாட்டில் வசிக்கும் ஒருவர் ஏதோ ஒரு வாய்த் தகராறில் வெள்ளைக்காரன் ஒருவரை அடித்துவிட்டார். அதற்காக அவரின் மேல் கனடா நாட்டு காவல் துறை வழக்கு பதிவு செய்து பின் சில அந்த வெள்ளைக்காரனுடன் சமரசம் செய்துக்கொண்ட பின் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பிரச்சனை முடிந்தது என்று பெருமூச்சு விட்டவருக்கு அடுத்து ஒரு பேரிடி இறங்கியது. அது அவர் வீடு தேடி வந்த தமிழீழ காவல்துறையின் கடிதம் தான். தமிழீழத்தின் குடிமகனாகிய நீங்கள் புலம்பெயர்ந்த நாட்டில் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். விசாரணையில் குற்றம் உங்களுடையது என்று தெரியவருகிறது. உங்களின் இந்த செயல் புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தமிழர்கள் குறித்த தவறான என்னத்தை விதைக்கும் செயலாக எங்களால் பார்க்கப்படுகிறது. எனவே உங்களின் மேல் தமிழீழ காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் எப்பொழுது தமிழீழத்திற்கு வந்தாலும் உங்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதில் குறிப்பிட வேண்டியது உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெற்ற இந்த குற்றச்செயலை தெரிந்துக்கொண்டது மட்டுமல்லாமல். குற்றம் யாருடையது என்பது வரை விசாரணை செய்யப்பட்ட பின்னே இந்த கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.தனது குடிமகன் தனது நாட்டில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இனத்தின் பெயரை கெடுக்க புலிகள் அனுமதித்ததில்லை.

தமிழீழ காவல்துறை 1991 ஆம் ஆண்டு நவம்பர் 19 தேதி தொடங்கப்பட்டது. இலங்கை அரசின் காவல்துறையில் பணியாற்றி பின் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பா.நடேசன் அவர்களின் நேரடி நெறிபடுத்தலில் ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறையாக தமிழீழக் காவல்துறை விளங்கியது. இரவு 12 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக சாலையில் செல்லும் அளவிற்கு போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் சிறிதும் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும்.

எவன் எங்களை தீவிரவாதியாக சொன்னாலும் நாங்கள் பெருமையாக சொல்வோம் புலிகள் எங்கள் ராணுவம் நாங்கள் புலிப் பிள்ளைகளென்று.

Updated: June 15, 2019 — 8:24 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *