முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பு? 18ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டம்!

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுக்களை மீளபொறுப்பேற்பது குறித்து எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார முன்னாள் அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்தார்.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தாக்குதலுடன் இவர்களும் தொடர்புடையவர்கள் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதன் பின்னணியில் ஆர்ப்பாட்டங்களும், உணவு தவிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான அழுத்தங்களால் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்ர்ல்லாஹ்வும், மேல்மாகாண ஆளுநராகவிருந்த அசாத் சாலியும் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதிவிகளை துறப்பதாக உஉத்தியோக பூர்வ அறிவிப்பை விடுத்து தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சுாகள் தமது பதவிகளை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அஸ்கிரிய மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் வேண்டு கோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே மீண்டும் தமது பதவிகளை ஏற்பது தொடர்பான தமது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிப்போம் என அவர்கள் அறித்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated: June 15, 2019 — 8:41 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *