கட்டுச்சோறு கட்டிக்கொண்டு அம்மா விரைந்திடுவாள் என்னைத்தேடி..!!

கட்டுச்சோறு கட்டிக்கொண்டு அம்மா விரைந்திடுவாள் என்னைத்தேடி
பழுதாகி விடும் என்று வெந்தயக்குழம்பு மணக்க மணக்க

பெரிய வெங்காயத்துடன் வதக்கியெடுத்து நூல் துணியிலே
கட்டி வருவாள் என் தாய்

கம கம என்ற வாசம் மூக்கினை
துளைக்கும் புழுதியிலும்
வியர்வையிலும் வரும் நாற்றம்

அம்மாவின் சோற்றுப் பொட்டலத்தில்
வரும் வாசனை மறைத்து விடும்

பல நாள் அலைந்திருப்பாள்
காணாமல் அழுதிருப்பாள்
வெறுத்து விடவில்லை அவள்

தினம் எனைத்தேடி ஒரு நாள் ஓரிடமாக
நடந்து கால் வலிக்க பெற முன் கண்ட
சுமையை விட

என்னைக்காண அலைந்த சுமை ஏராளம்கொண்டு வந்த
ஒரு பொட்டலத்தில் பத்துப்பேரின்

பசியாறும் அதில் வெறும் சோறு மட்டுமல்லவே
அன்பென்ற நெய்யுமல்லவா ஊற்றியிருக்கிறாள்

என் தாய் நான் போராடுகிறேன் நாட்டுக்காக
ஆனாலும் நான் வெறும் கருவியே

என்னை முன்னின்று இயக்குபவள் என் தாயல்லவா
போ மகனே என தட்டிக்கொடுத்தவள்
வீரமா கருவியான நான் வீரனா

என் தாயே உண்மை வீரம்
கொண்ட மங்கை

அம்மாவின் கையால் உண்ட
அந்த ஒரு வேளை சோறு

திரும்ப வரும் வரை
மணத்துக்கொண்டுதான்
இருக்கும்

எத்தனை வருடம்
ஆகுமோ யான்
அறியேன்

  • பவித்ரா நந்தகுமார்
Updated: June 18, 2019 — 8:16 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *