இன்றும் தொடரும் போராட்டம்! கொந்தளிப்பு நிலையில் கல்முனை நகரம்!

2வது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை மாநகர சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலையைத் தேற்றும் வகையில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் முதலுதவிச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

“இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள்” என சமீபத்தில் கண்டியில் உண்ணாவிரதமிருந்த நாடாளமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு ஆதரவூ தெரிவிக்கச் சென்றிருந்த பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் 30 வருடகாலமாக தரமுயர்த்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், கல்முனை மக்களின் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகமே எமது மிக பிரதான கோரிக்கை என முன்னிறுத்தி, சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இணைந்துள்ளனர். இன்றைய தினம் பாண்டிருப்பு அனைத்து ஆலய ஒன்றியத்தின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் ஐந்தாவது நபராக உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கல்முனை நகரம் கொதி நிலையடைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

Updated: June 18, 2019 — 8:45 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *