பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாத அரசியல் வாதிகள்!

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் வைத்து தமிழ்மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்ற தமிழ் அரசியல் வாதிகள் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர்களின் பிரச்சனைக்கு இதுவரை எதுவித தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை

தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சுகபோக வாழ்கையினையே அரசாங்கத்திடம் இருந்து பெற்று வாழ்ந்து வருகின்றார்கள் ஆனால் தமிழர்களின் பிரச்சனைக்கு எந்த தீர்வினையும் பெற்றுத்தரவ முன்னின்றதாக இல்லை.

இன்னிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் பூர்வீகு காணிகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றவேளை அதற்காக தொடர் போராட்டங்களை மக்கள் மேற்கொண்டு வந்தாலும் வாக்கு போட்ட மக்களின் கருத்தினை செவிசாய்க்காத கூட்டமைப்பு எம்.பிமார்களால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

அரசியல் இலாபத்திற்காக தங்கள் சுயநலனுக்காக தமிழர்களை விற்று பிளைப்பு நடத்தும் இந்த அரசியல் வாதிகளை மக்கள் தொடர்ச்சியாக தெரிவு செய்வார்களானால் தமிழர்களின் பிரச்சனையும் தொடர்ந்து கொண்டேதான் செல்லும்.

இதில் மாற்றத்தினை காணவேண்டும் என்பதை இலக்காக கொண்டு இனிவரும் காலங்களில் தாயகத்தில் உள்ள வாக்காளர்களான எங்கள் உறவுகளின் வாக்குகளில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும்

அதன் வகையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் உங்கள் உறவுகள் தொடர்பாகவும் தற்போது உள்ள அரசியல் வாதிகளின் உண்மை நிலைதொடர்பிலும் தெரிந்துகொள்ளுங்கள். தெரியப்படுத்துங்கள் இதுதான் எங்கள் தாயகத்தின் நிலை.

தமிழர்களையும் அவர்களின் வாக்கினையும் பெற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர்களின் காணிவிடையத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு இதனை மாற்றி அமைக்க விரைந்து செயற்பட கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Updated: June 19, 2019 — 7:56 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *