கிளிநொச்சியில் விபத்து சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர்கள் பலி !!

கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் ஶ்ரீலங்கா இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று மத்திய 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதில் இவ் அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.

புகையிரத அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி புகையிரத பாதையினை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும். இதற்கு முன்னரும் இரண்டு விபத்துக்களில் மூவர் பலியாகியிருந்தனர். இது மூன்றாவது விபத்து.

இறந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் இதுவரை காலமும் தமிழர்களி உயிரினை எடுத்துவந்த புகையிரத கடவைகள் தற்போது சிங்கள படையினரின் உயிரையும் எடுத்துள்ளது.

இனியாவது கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள புகையிரத கடவைகளுக்கு காவலாளிகள் மற்றும் தடைகளை போடுவார்களா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

வடமாகாணத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் ஆனால் வவுனியா தொடக்கம் காங்கேசன் துறைவரையான 154 கிலோமீற்றர் புகையிரத பாதையில் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன பல தடவைகள் மக்கள் பல்வேறு பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டியும் தமிழர்களை அழிக்கவென்று திட்டமிடப்பட்டு இவ்வாறான செயற்பாடுகளில் சிங்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

வன்னி யாழ்ப்பாணத்தில் வாக்கினை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பின் கூட்டாளிகளோ இது தொடர்பில் மௌனம் காத்துவருகின்றார்கள் அவர்கள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுப்பதும்,பணம் சம்பாதிப்பதும்,சிங்களவெறியர்களை காப்பாற்றுவதிலுமே குறியாக நிக்கின்றார்கள்.

வடக்கில் தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள் இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு என்பதையோ அல்லது தமிழர்களின் பொருளாதார விடையத்திலோ ஒருவேலைவாய்பினையோ பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கத்திடம் பணத்தினை நக்கிய நாய்களாக நன்றிக்கடனுடன் அரசாங்கத்திற்கு சேவகம் செய்து வருகின்றார்கள்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டைபகுதியில் இடம்பெற்ற விபத்து இது முதல்தடவையல்ல மூன்றாம் தடவையாக இது இடம்பெற்றுள்ளது இதில் கொல்லப்பட்டது சிங்களப்படைகள்தான் ஆனால் இந்த பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தமிழ் மக்கள் என்பதை நன்கு உணரவேண்டும்.

எது எவ்வாறாயினும் சிங்கள இனவாதம் அழிவது காலத்தின் கட்டாயம்..

 

 

Updated: June 25, 2019 — 3:20 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *