சிங்கள காவல்துறையினர் இடையூறுகளுக்கு மத்தியில் தொடரும் நீராவியடி பிள்ளையார் திருவிழா.!

வட தமிழீழம் , முல்லைத்தீவு – செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்வில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கு  சிங்கள பொலிஸார் இடையூறு விளைவித்த போதிலும்  நிகழ்வுகள் சுமூகமாக இடம்பெற்று வருகின்றன

108 பானைகளில் பொங்கல் பொங்குவதற்காக அடுப்புகளை ஒழுங்கமைப்பு செய்யும்போது, அடுப்புகளை சிங்கள  பேரினவாத பௌத்த மதகுரு அத்து மீறி குடியிருக்கும் கட்டடத்தை அண்மித்து வைக்கவேண்டாம் என பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.

அடுப்புகளை கோயிலுக்கு வெளியே வீதியில் வைத்து பொங்குமாறும் சிங்கள பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக சிங்கள பொலிஸாருக்கும்  தமிழ் மக்களுக்கும் இடையில் முரண்பாடு எழுந்துள்ளது. இதனையடுத்து, அரச தலைவர்கள்சிங்கள  பொலிஸாருடன் உரையாடியதைத் தொடர்ந்து, சிங்கள பொலிஸார் அங்கிருந்து  சென்றனர்

அத்தோடு இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பக்தர்கள்  வருகைபுரிந்துள்ளார்கள் குறித்த பகுதியில் சிங்கள இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Updated: July 6, 2019 — 10:24 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *