யாழ் பல்கலையில் தடைகளும் தாண்டி கறுப்பு யூலை நினைவு – காணொளி இணைப்பு !!

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் இடம்பெற்று இன்றுடன் 36ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நினைவுகூறும் முகமாக தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Updated: July 25, 2019 — 6:53 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *