கறுப்பு யூலை 1983 சிங்கள ஆவணப்படம் ( Black July 1983 – Singala Documentary ) !!

கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து வருடங்கள் நிறைவடைந்து விட்டது. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது.

ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது.

Updated: July 23, 2019 — 2:55 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *