வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் சித்திர தேர் வெள்ளோட்டம் !!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 45 அடி உய­ரம் கொண்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.

தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. நாளை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. புதிய சித்திர தேர் வடிவமைக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நேரலை..மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் முகஉத்தர திருத்தேர் வெள்ளோட்டம்

நேரலை..மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் முகஉத்தர திருத்தேர் வெள்ளோட்டம்

Gepostet von OHM TV am Samstag, 27. Juli 2019

முன்­பி­ருந்த முக ­உத்­தர தேரை விடவும் பெரி­தா­க­வும் 45 அடி உய­ரம் கொண்டு மேலும் சிறப்பான சிற்­பங்­களை­யும் கொண்­ட­தாக இந்த தேர் அமைக்கப்பட்டுள்ளது.

அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் விடுதலைப்போரின்போது இலங்கை சிங்கள இராணுவத்தினால் அழிவடைந்திருந்தது. மேலும் இதன்போது, ஏனைய நான்கு தேர்­கள், சப்பரம், திரு­மஞ்­சம், கைலா­ய­வா­க­னம் என்­பவையும் முற்­று­மு­ழு­தாக இராணுவத்தினால் அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Updated: July 29, 2019 — 6:24 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *