தமிழர்களின் வயிற்றிலடித்து சிங்கள வனஜீவராசிகள் திணைக்களம்.!

வட தமிழீழம் , யாழ்.மருதங்கேணி – கேவிலில் வசிக்கும் 120 குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ள எழுவரைகுளத்தினை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு சம்பாதித்து சுகபோகங்களை அனுபதிவித்து வருகின்றார்கள்.

இக்; குற்றச்சாட்டுத் தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் அப்பகுதி மீனவர்களால் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு, 120 குடும்பங்களுக்குமான வாழ்வாதார கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி – கேவில் பகுதியில் உள்ள எழுவரைகுளத்தினை சூழ உள்ள பகுதிகளில் வாழும் 120 குடும்பங்கள் அக் குளத்தில் செய்யும் நன்னீர் மீன்பிடியையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக இத் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தடை போட்டுள்ளனர்.

குறிப்பாக அந்த குளத்தில் தொழிலில் ஈடுபடுவதற்கு குறித்த திணைக்களத்தினரால் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 120 குடும்பங்களும் தமது வாழ்வாதாரத்தினை முற்றாக ,ழந்துள்ளனர்.

அப்பகுதி மக்களுக்கு மீன்படிக்க தடை விதித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினல் அக் குளத்தில் தாம் சுதந்திரமாக நன்னீர் மீன்டிபியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அக் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை வெளி மாவட்டத்திற்கு குளிரூட்டி வாகனங்களில் அனுப்பிவைக்கும் அளவிற்கு பாரிய அளவில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மீனவர்களால் மருதங்கேணி பிரதேச செயலருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பிரதேச செயலர் அவ்விடயத்தினை நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் கலவத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் மருதங்கேணி பிரதேச செயலருக்கு உறுதியளித்திருந்தனர்.

Updated: July 30, 2019 — 9:35 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *