சிங்கள அரசின் கப்பலோட்டிகளாக கடற்புலிகளை நியமிக்க கோருகிறார் சிறிதரன்.!

வட  தமிழீழம் , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சமுத்திர பல்கலைக்கழகங்களின் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.மாவட்டத்தின் தீவகங்களான போக்குவரத்து சேவையில் வடதாரகை, நெடுந்தாரகை உள்ளிட்ட வேறு சில கப்பல்கள் ஈடுபடுகின்றன. ஆனால் அந்த கப்பல்களின் சாரதிகளாக கடற்படையினரே உள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் சமூத்திர பல்கலைக்கழகம் என்ற ஒன்று உள்ள போதும், தமிழ் இளைஞர்களுக்கு கப்பல் சாரதி பயிட்சி வழங்கப்படாமல் இருப்பது ஏன்? தொடர்ந்தும் கடற்படையினர் அந்த சேவைக்காக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் இருந்தவர்கள் சகல விதமான கல்பல்களையும் செலுத்தக் கூடிய வல்லமை கொண்டவர்கள். ஆனால் நீங்கள் கோரும் சாரதிய சான்றிதழ்கள் அவர்களிடம் இருக்காது.

வேண்டுமானால் அவர்களை நீங்கள் இணைத்துக் கொண்டால் யாழ்.தீவகத்திற்கான கடல் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்களுக்கான சாரதிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களின் ஒருவரான அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தேவையில்லாத கதைகளை பேசி வீணாக சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று பாராளுமன்ற உறுப்பிரை சட்டிக்காட்டி கூட்டத்தில் இருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Updated: July 30, 2019 — 9:37 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *