கன்னியாவில் மக்களின் பிதிர்க்கடன் கிரியை குழப்பும் பேரினவாத பிக்குகள்

ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் மக்கள் பிதிர்க்கடன் செலுத்தினர்.

கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்துக்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரியை நிலையத்தில் அந்தனர்களுக்கு தானம் வழங்கினர்.

அதேவேளை சிவாலயத்துக்கு முன்னால் உள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த துறவிகளின் வழிகாட்டலில் அதிஸ்டான பூசை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல் என்று மக்கள் விசனம் தெரிவித்தனர்.

Updated: July 31, 2019 — 10:19 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *