ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர்பதியமர் நாதன் ஸ்ரீ கந்தவேள் பெருமானுக்கு நாளை துவஜாரோகணம் என்று சொல்லப்படும் கொடியோற்ற வைபவமாம் என எண்ணும் போதே சைவ தமிழர் மனதில் ஒரு எல்லையில்லா ஆனந்தம். ஏன் என்றால் முருகன் வழிபாடானது சைவ தமிழர் பாரம்பரியத்தின் ஆதி மூலம் ஆக திகழ்கின்றது மேலும் நல்லை நகர் நாதன் தனது உற்சவத்தில் என்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்கும் பண்பாட்டுக்கும் எங்கும் இல்லாதவாறு முன்னுரிமை அளிப்பது தமிழர் பாரம்பரியத்தை உலகு எங்கும் பறைசாற்றி நிற்கின்றதுஅது புதிர் எடுத்தலில் இருந்து கந்த புராணம் படித்தல் பந்தல் கால் நாட்டுதல், மரபு வழி கட்டிய பொல் மாப்பாணர் சார்பாக நித்திய பூஜைக்கு எடுத்துவரல், காளஞ்சி கொடுத்தல் என சொல்லிக்கோண்டே போகலம் இதிலே மிகவும் முக்கியமான விடயம் இன்றய நிகழ்வாகும் “கொடிச்சீலை எடுத்துவரல்”
 
நல்லூர் ஶ்ரீ கந்தவேள் பெருமானின் துவஜரோகணத்திற்கான கொடிச்சிலை எடுத்துவரும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பதியிலே வெகுவிமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வு ஆனது நல்லூர் ராஜதானியின் மிக முக்கிய நகரங்கள் ஆக விளங்கிய நல்லூர் மற்றும் கல்வியங்காட்டின் பண்டைய உறவை காட்டுவதுடன் செங்குந்தர் பரம்பரையினரையும் நினைவுபடுத்தி நிற்கின்றது நல்லூர் ராஜதானியில் அக்காலத்தில் மிக முக்கிய விடையம் ஆக ஆடை மற்றும் வையித்திய துறையில் மேன்மை பெற்ற நகரமாக கல்வியங்காடு விளங்கியது.
 
அக்கலம் தொட்டு நெசவு எனும் ஆடை வடிவமைப்பு செய்பவர்களால் வருடப்பிறப்பின் பின்னர் சுப முகூர்த்தவேலையிலே நெசவு தெறியில் நெய்யப்பட்ட வெண் துணியை முருகப்பெருமானுக்கு என எடுத்து வைத்து அந்த துனியிலே ஶ்ரீ கந்தவேள் பெருமானுக்கு உரிய முறையில் கொடிச்சீலை ஆனது வைரையப்பட்டு கல்வியங்கட்டில் இருந்து நல்லூர் ராஜதானியின் வடக்கு எல்லையாக் அமைந்த சட்டநாதர் சிவன் கோவில் அருகே கொன்றலடி எனப்படும் இடத்திலே முருகப்பெருமானின் கொடிச்சீலை பவனி வரும் இரதத்துடன் அமைந்த வேல் கோவிலில் இருந்து தேரில் முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வுக்கான கொடிச்சீலை நல்லை இராஜதானியின் வடக்கு வாசலினால் சங்கிலிய மகாராஜவின் அரன்மனை வாயிலாக எடுத்துவரப்பட்டு ஶ்ரீ சண்முகப்பெருமானிடம் வழங்கப்படும் பாரம்பரிய நிகழ்வே கொடிச்சீலை எடுத்துவரல்.
Updated: August 5, 2019 — 11:43 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *