சஜித்திற்காக தேங்காய் உடைத்த செம்புகள் இவர்களை கண்டுகொள்வார்களா ? ( காணொளி )

இன்று வன்னியில் சஜித்பிரேமதாசாதன் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கூட்டமைப்பின் செம்புகள் காவடி எடுப்பார்கள்,கற்பூரம் கொழுத்துவார்கள்,ஏன் தீயில் விழும் அளவிற்கு மாறிவிட்டார்கள் அதன் முன்கட்டமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தேங்காய் உடைத்தார்கள் அருகில் உள்ள கேப்பாபுலவு மக்கள் இன்றும் தங்கள் நிலங்களை கேட்டு போராடிவருகின்றார்கள்.

எல்லாம் பணத்திற்காக என்று மாற்றிவிட்ட நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வன்னியில் அதிகரித்துள்ளது

கம்பரெலிய திட்டம் என்ற அபிவிருத்தி திட்டம் ஊடாக வன்னியின்பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு துணைபோய் கோடிக்கணக்கில் பணத்தினை வாங்கிவிட்டு இவர்கள் செய்யும் வேலைதான் என்ன?

வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் வன்னியில் உள்ள வீதிகளுக்கு கிரவல் போடுவதும் அது மாரிமழையில் வெள்ளத்தில் அள்ளுண்டுபோகும், ஆலயங்களுக்கு மதில் கட்டுவதற்கு நிதி,விளையாட்டு மைதானங்களுக்கு ஒளியூட்டுவதற்கு நிதியும்,தான் இவர்கள் செய்யும் வேலை மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் ஏதாவது செய்கின்றார்களா இல்லை.

வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாற்பது பேரை தெரிவுசெய்து நேர்முகத்தேர்விற்கபாக கொழும்பிற்கு அனுப்பியுள்ளார்கள் இதில் இவர்களின் சொந்தங்களும் இவர்களுக்கு சேவகம் செய்பவர்களும்தான் எத்தனை இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இன்றம் தவித்து வருகின்றார்கள் முன்னாள் போராளிகளின் குடும்ப நிலைகளை இவர்கள் எண்ணிக்கூட பார்ப்பதில்லை பெண் தலைமைத்துவ குடும்பங்களை கூட இவர்கள் எண்ணிபார்பதில்லை இவ்வாறான நிலையில் இவர்களின் சுகபோக வாழ்கைக்காகவே பணத்தினை அரசிடம் இருந்து பெற்றுவருகின்றமை அம்பலமாகியுள்ளது இதுதான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அபிவிருத்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடியாட்களே சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்ககோரி வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் தேங்காய் அடித்தார்கள்.

சிவமோகனின் ஆதரவாளர்கள் பலர் சஜித்பிரேமதாசாவை ஜனாதிபதியாக்க முயற்சித்துவருகின்றார்கள் ஆனால் இன்னும் ஜக்கியதேசியக்கட்சியில் யார் ஜார் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிக்கப்படாத நிலையில் கட்சியின் பணத்திற்காக முண்டியடிக்கும் கூட்டங்கள் அலைமோதுகின்றன இவர்கள் எல்லாம் முன்னர் மகிந்தவிற்கு ஆதரவாக வழிபட்டவர்கள் என்பதுதான் நகைப்பிற்கு இடமாக காணப்படுகின்றது.

Updated: August 8, 2019 — 9:00 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *