தலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…? ( காணொளி )

அன்று தமிழீழப் பாடகனாக இன்று மாவீரனாக எம் மண்ணில் விதையான குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்)

வாழ்வில் மற்க்க முடியாத சம்பவம் என்ன என வினாவப்பட்டதற்கு தலைவர் மாமா வழங்கிய பரிசு என்கிறார் அது என்ன கூறுகிறார் குட்டிக் கண்ணன்….

தமிழீழ எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன் (சிலம்பரசன்) அவர்களுடனான நேர்காணல் – 1999 பங்குனி

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் “ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி” போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் போராளி சிலம்பரசன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களிடம் விடுதலைக் கருத்தை கட்டி வளர்க்கவும்,எழுச்சி ஊட்டவும், தனது சிறுவயது முதல் தனது குரலால் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டியவர் குட்டிக்கண்ணன்.

1990-களின் பிற்பகுதியில் தெருவழி அரங்குகளில் மக்கள் முன் இசைப்பாடல்களைப் பாடி எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் பின்னர் பாடல் தொகுப்புக்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி, டப்பாங்குத்துப் பாட்டுத்தான், வானத்திலே முழுநிலா, பாரதி போல மீசை வைச்ச அப்பாவே, தம்பியரே தங்கையரே, அன்புக்கு அர்த்தமாய் அண்ணா குக்கூ குக்கூ குயிலக்கா, எங்கள் அண்ணன் பிரபாகரன் எல்லோருக்கும் இந்த மண் சொந்தம் ஆகிய பாடல்களை இசைப்பாடல் தொகுதிகளில் குட்டிக்கண்ணன் பாடியுள்ளார்.

Updated: August 9, 2019 — 8:36 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *