அமெரிக்க செல்ல இருக்கும் தேசியத் தலைவரின் ஊரினைச் சேர்ந்த “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

நேற்று இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தின் பூனே நகரில் இடம்பெற்ற இந்திய அளவிலான 10th Modem Pentathalon National Championships 2019 ( 10th Buathle / Triathle National Championships 2019 ) போட்டிகள் இடம்பெற்றது . குறித்த போட்டி எதிர்வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெறவுள்ள 10th ( Buathle / Tiathle World Championships 2019 ) முன்னோடியாக இடம்பெற்றது .

நேற்று இடம்பெற்ற குறித்த 2 போட்டிகளில் செல்வி தனுஜா 1 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் பெற்றுளார் . இதன் மூலம் மிக இலகுவாக 10th Buathle / Tiathle | World Championships 2019 போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளார் .

15 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவினருக்கான

T 800 Meters Run – 100 Meters Swim – 800 Meters Run ஐ 07 : 43 : 03 நிமிடத்தில் அடைந்து முதல் இடத்தையும்,

4×400 Run , 4 x 25 Swim , 4 x 5 Hits ; 5M 16 . 15 . 87 நிமிட நேரத்தில் அடைந்து 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் .

ஆனாலும் செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கை கடவுச்சீட்டைப்பெற்று இந்தியாவில் வசிப்பதால் இந்தியாவிலிருந்து வெளிநாடு ஒன்றில் போட்டியிடுவதில் இடர்கள் உள்ளது எனக் கூறப்படுகின்றது . ஆனாலும் தனுஜாவின் தந்தை திரு.ஜெயக்குமார் தமது வழக்கறிஞர் மூலம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளார்,

இந்தியாவில் பல போட்டிகளில் பங்குகொண்டு பல வெற்றிகளை ஈட்டி ஈழதேசத்துக்கும், உலகத்தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் #செல்வி_தனுஜா_ஜெயக்குமார் அமெரிக்காவிற்கும் சென்று தனது அதீத திறமைகளை நிலைநாட்டி பல்வேறு பரிசில்களை பெறுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated: August 19, 2019 — 9:54 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *