இன அழிப்பு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல – ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணம் !!

ஐநா வை நோக்கிய நீதி கோரும் நடைப்பயணம் எதிர்வரும் 28ம் நாள் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இருந்து ஆரம்பமாகி பிரான்சின் நகரங்களுடாக ஐநா சென்றடையவுள்ளது.இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ளும் மனித உரிமைச்செயற்பாட்டாளரும் தொடர்ந்து ஈழத்தில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு நீதி கோரி ஐநா முன்றலில் தமிழினப்படுகொலை நிழற்பட சாட்சியங்களை வைத்து நீதி கோரி வருபவருமான கஜன் தமிழ் முரசம் வானொலிக்கு வழங்கிய செவ்வியில்

நாம் தொடர்ந்து போராடுவதன் ஊடாகவே தமிழினப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ளமுடியும். நாம் போராட்டங்களை இடைவிட்டு இடைவிட்டு செய்வதன் மூலம் போராட்டத்தின் அழுத்தம் குறைந்து போகின்றது.ஆரம்பத்தில் இவ்வாறான நீதி கோரும் நடைப்பயணமொன்றை பலர் சேர்ந்து மேற்கொண்டோம் அவ்வாறு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் ஐநா அதிகாரிகளை சந்தித்து தமிழின நீதியை வலியுறுத்தியபோது அவர்கள் எங்களுக்கு சொன்ன வார்த்தை நீங்கள் இப்படி போராடிவிட்டு பிறகு ஒரு இடைவெளியை விட்டு மீண்டும் போராடுவீர்கள் அவ்வாறான போராட்டங்கள் சர்வதேசத்துக்கு அழுத்தம் தராது என்ற தொனிபட தெரிவித்த பின்னர்தான் நான் தனியொருவனாக ஐநா வின் 2013ல் இருந்து தமிழினப்படுகொலை புகைப்பட நிழற்படங்களை வைத்து ஒரு போராட்டத்தை செய்து வருகின்றேன்.

இன்றைக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு சோர்வு காணப்படுகின்றது. 1948ல் இருந்து தமிழர் தாயகத்துக்காக போராடுகின்ற ஈழமக்கள் அவ்வாறு சோர்வுற்ற சென்றால் அத்தனை தசாப்பதங்கள் போராடியதற்கும் கொடுத்த உயிர்களுக்கும் அர்த்தமில்லாது போய்விடும்.இன்றைக்கு தமிழர்களில் ஒரு சாரார் எல்லாம் முடிந்து விட்டு இனியென்ன என்ற போக்கிலும் உள்ளார்கள். மற்றொரு சாரார் ஆறாத விடுதலை வேட்கையோடு தாயகத்திலும் புலத்திலும் இயங்குகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலின் பின்பு துப்பாக்;கிச் சத்தங்கள் இல்லை.குண்டு ஓசைகள் இல்லை.மரணங்கள் இல்லை.எனவே இன அழிப்பு என்பது முள்ளிவாய்க்காலோடு முடிந்து விட்டது என நினைக்கின்றார்கள்.அப்படியல்ல இன அழிப்பு என்பது அந்த இனத்தின் மொழி கலாச்சாரம் பண்பாடு பொருளாதாரம் நிலம் என்பதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் இனப்படுகொலைக்குள்ளேயே சேரும்எனவே இன்றும் ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தப்படுகின்றது.

இதை தமிழர்கள் உணர்ந்து ஒன்று திரண்டு ஒரு குடையின் கீழ் ஜனநாயக வழிப்போராட்டங்களை வீச்சாக முன்னெடுக்க புலத்திலும் நிலத்திலும் முனையவேண்டும் போராடுகின்றவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஐநா நோக்கி நீதி கோரும் நடை பயணத்தை ஆரம்பிக்க உள்ளவருமான கஜன் தமிழ் முரசம் வானொலிக்கு தெரிவித்தார்.

Updated: August 19, 2019 — 10:22 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *