தமிழின நீதிக்கான மாபெரும் நடைப்போராட்டம்..!!

தியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும் சிறீலங்கா சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு பாரிசிலிருந்து ஜெனிவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் வலிகளை கால்களிலும் நெஞ்சிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்கும் நடைப்போராட்டம்..

28.08.2019 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமாகி

16.09.2019 திங்கள் ஜெனிவா ( முருகதாசு திடல் ) நீதிக்கான பேரணியில் இணைவோம்

அன்பான எமது புலம்பெயர் தேசமக்களே !

கண்ணீரிலும்  செந்நீரிலும் இன்று குளித்துக் கொண்டிருக்கும் எம் தமிழீழ மண் சிங்களத்தால் அங்குலம் அங்குலமாக கபளீகரம் செய்யப்படுகின்றது.

தாயகத்தில் குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மௌனித்து வாய்கள் கட்டப்பட்ட நிலையில் புலத்தில் எம் உயிலும் மேலான மொழியையும் கலை பண்பாடுகளையும் பாதுகாக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் அந்த மொழியும் பண்பாடும் வாழ பறிபோய்க்கொண்டிருக்கும் எமது மண்ணையும் பாதுகாக்க வேண்டுமல்லவா ?

இன்று களத்திலும்  புலத்திலும் தாயகம் நோக்கி நடைபெறும் அனைத்து சனநாயகவழிப் போராட்டங்களும் ஏதோவொரு வகையில் பறிபோகும் எமது மண்ணை நிறுத்தி வைக்கும்.

புலத்தில் எம்மக்களினால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான சனநாயக போராட்டம் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் எமது மண்ணையும், போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வைக்கும் என்பதை நம்புவோம்.

இவ்வாறு பல்வேறு எமது நியாமான கோரிக்கைகளை முன்வைத்து ஜெனிவா ஐ.நா.வின் மனிதவுரிமைகளின் 42 ஆவது கூட்டத்தொடரின் போது நடைபெறவிருக்கும் இவ் நடைபயணப்போராட்டத்தில் இளையவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

எனது தாயகம் அணலிடை வாழ நாம் மட்டும் நலம் காண்பதேது! உணவு உறக்கங்கள் ஏது!உடல்கள் சாயலாம் ! சாயலாம் ! உயிர்கள் சாயலாம் ! சாயலாம் ! உலகில் அறம் சாயுமா ?

கடல்கள், புயல்கள், ஓயலாம் ஓயலாம் தமிழர் படை நாம் எமது நடைபயணம் ஓயுமா ? ஓயாது !

நடைப்பபயணத்தில் தங்களையும் இனைத்து பயணிக்க விரும்புவோர்.

மேலதிக தொடர்புகளுக்கு : – 01 43 15 0421 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு அலுவலகத்துடன் பி.பகல் 14 மணிமுதல் 20.00 மணிவரை தொடர்பு கொண்டு உங்கள் விபரத்தைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரை அடக்கும் தடைகள் உடைய
நடையினில் செல்வோம் ஐநா சபைவரை…

Updated: August 19, 2019 — 10:28 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *