சிங்கள பொலிசாரால் தாக்கப்படும் தமிழர்கள் ( காணொளி இணைப்பு ).!

தென் தமிழீழம் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி முகமட் ஆசாத்என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் சிங்கள பொலிஸார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து பொலிஸார் நடத்

திய தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுகள்  பிரயோகம்  செய்யப்பட்டது.

பொலிஸாரின் தடிஅடித் தாக்குதலில் காயமடைந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என நால்வர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறிக்கிடந்த தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது

இந்த உடற்பாகங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய காத்தான்குடியைச்சேர்ந்த முகமது ஆசாத் என்பவரின் என டி.என்.டி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து உடற்பாகங்களை பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரச அதிபருக்குநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர்
ஆலையடி மயானத்தில் புதைக்க பொலிஸார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது.

தொடர்ந்து கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காத்தான்குடியில் பிரதேசத்தில் புதைக்க முற்பட்டபோதுஅங்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்தும் உடற்பாகங்கள் வைத்தியசாலை பிரேத அறையில் இருந்துள்ள நிலையில்  திங்கட்கிழமை மாலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்களை பொலிசார் புதைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைஅப்புறப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுக்களை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் அரச அதிபரின் ஏற்பாட்டில்  இன்று சம்மந்தப்பட்ட தரப்புகள் ஒன்று கூடி இதுதொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாக தீர்மானம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அப் பகுதியில்
உண்டான பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.

Updated: August 28, 2019 — 1:28 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *