பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக இன்று நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும் ! ( காணொளி இணைப்பு ).!

28.08.2019 – 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது.

பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக இன்று நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும் !

பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக இன்று நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும் !28.08.2019 – 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது.கடமையை செய்கவென காலம் உறுத்துகின்றது கதவுகள் திறக்குமென நம்பிக்கை சொல்கின்றது….இன்று தொடங்கிற்று நீதிக்கான நடைப்பயணம்நெஞ்சு நிமிர்த்தி நிலமாண்ட தமிழ்க்குடி வஞ்சகர்களால் வீழ்த்தப்பட்டுவெங்கொடுமைக்கு நீதி கேட்டு பாரிசில் இருந்து பயணம் ஈழத்தமிழன் வீழ்ந்தே கிடக்கவேண்டுமென்பது விதியா தமிழா விழித்துக்கொள் எத்தனை முறை இந்த வார்த்தைகளை கேட்டிருப்போம்இன்னும்தான் இருள் எம்மை சூழ இன்னும் தமிழினத்தில் யாரோ விழிக்கவில்லை போல்முள்ளிவாய்க்காலில் ரத்தக்களரியில் ஈழத்தமிழினம் எல்லாம் இழந்தபின்பும்இனியும் விழிக்காது இனத்துள் எவரும் இருப்போமோ தமிழன் மானத்துக்கு என்றும் மரணமில்லை மண்டியிடாது தமிழினம் காலத்துக்கு காலம் கயவர்களால் அடக்கப்பட்டோம் அழிக்கப்பட்டோம் கற்பழிக்கப்பட்டோம் வெட்டி எறியப்பட்டோம்உயிரோடு கட்டி சுட்டு வீசப்பட்டோம் இனப்படுகொலைக்கு ஈழத்தில் உள்ளாக்கப்பட்டோம் ஒன்று இரண்டா நம் இனம் அடைந்த துயர் ஒன்றா இரண்டா நாம் கொடுத்த ஈகம் இன்றுமேன் எமக்கு விடுதலையில்லை இதை நாம் உரத்துக் கேட்டே ஆகவேண்டும் எமக்கும் ஒரு நீதி நிச்சயம் இந்த உலகத்தில் ஏதோ கதவின் பின்னே உண்டுஅதை உரத்துத் தொடர்ந்து தட்டுவோம் சத்தியத்துக்காக வீழ்ந்தவர்களின் சொந்தங்கள் நாங்கள் எங்கள் தொப்பூள் கொடிகளை வித்துடலாக்கி விட்டு இருப்பவர்கள் நாங்கள் எத்தனை துயர் வந்தபோதும் எங்கள் மானத்துக்காக போராடிய கவரிமான்களோடுகைகோர்த்து இருந்தவர்கள் நாங்கள் எப்படி எல்லாம் மறந்து ஒரு பிணமென நடப்பது நாம் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் வெடித்து காற்றானவர்கள் எத்தனைபேர் நாம் ஓய மாட்டோம் விடுதலை கிடைக்கும் வரையென அலைகளாகி மாறி கரை தழுவிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்அத்தனையும் மறந்து நாம் ஒரு பிணமென இருப்போமா எமது கடமையை செய்கவென காலம் உறுத்துகின்றது கதவுகள் திறக்குமென நம்பிக்கை சொல்கின்றது கூடி திரண்டு தட்டுங்கள் என வரலாறு உந்துகின்றது வாருங்கள் தமிழின நீதி கோருவோம் நெஞ்சங்களேஐநா நோக்கி நடப்போம் உரத்த குரலில் ஒன்று திரண்டு எங்கள் நீதியை கேட்போம்தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம். எமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம்.இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும், பங்கு கொள்ளவும், பங்களிக்க வைக்கவும்..நன்றிதமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு – 06 62 84 6606தமிழீழ மக்கள் பேரவை – 06 52 72 5867தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421

Gepostet von சின்னவன் / SiNnavan-MPK am Mittwoch, 28. August 2019

கடமையை செய்கவென காலம் உறுத்துகின்றது கதவுகள் திறக்குமென நம்பிக்கை சொல்கின்றது….

இன்று தொடங்கிற்று நீதிக்கான நடைப்பயணம்
நெஞ்சு நிமிர்த்தி நிலமாண்ட தமிழ்க்குடி வஞ்சகர்களால் வீழ்த்தப்பட்டு
வெங்கொடுமைக்கு நீதி கேட்டு பாரிசில் இருந்து பயணம் ஈழத்தமிழன் வீழ்ந்தே கிடக்கவேண்டுமென்பது விதியா

தமிழா விழித்துக்கொள் எத்தனை முறை இந்த வார்த்தைகளை கேட்டிருப்போம்
இன்னும்தான் இருள் எம்மை சூழ இன்னும் தமிழினத்தில் யாரோ விழிக்கவில்லை போல்
முள்ளிவாய்க்காலில் ரத்தக்களரியில் ஈழத்தமிழினம் எல்லாம் இழந்தபின்பும்

இனியும் விழிக்காது இனத்துள் எவரும் இருப்போமோ தமிழன் மானத்துக்கு என்றும் மரணமில்லை மண்டியிடாது தமிழினம் காலத்துக்கு காலம் கயவர்களால் அடக்கப்பட்டோம் அழிக்கப்பட்டோம் கற்பழிக்கப்பட்டோம் வெட்டி எறியப்பட்டோம்

உயிரோடு கட்டி சுட்டு வீசப்பட்டோம் இனப்படுகொலைக்கு ஈழத்தில் உள்ளாக்கப்பட்டோம் ஒன்று இரண்டா நம் இனம் அடைந்த துயர் ஒன்றா இரண்டா நாம் கொடுத்த ஈகம் இன்றுமேன் எமக்கு விடுதலையில்லை இதை நாம் உரத்துக் கேட்டே ஆகவேண்டும் எமக்கும் ஒரு நீதி நிச்சயம் இந்த உலகத்தில் ஏதோ கதவின் பின்னே உண்டு

அதை உரத்துத் தொடர்ந்து தட்டுவோம் சத்தியத்துக்காக வீழ்ந்தவர்களின் சொந்தங்கள் நாங்கள் எங்கள் தொப்பூள் கொடிகளை வித்துடலாக்கி விட்டு இருப்பவர்கள் நாங்கள் எத்தனை துயர் வந்தபோதும் எங்கள் மானத்துக்காக போராடிய கவரிமான்களோடு

கைகோர்த்து இருந்தவர்கள் நாங்கள் எப்படி எல்லாம் மறந்து ஒரு பிணமென நடப்பது நாம் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் வெடித்து காற்றானவர்கள் எத்தனைபேர் நாம் ஓய மாட்டோம் விடுதலை கிடைக்கும் வரையென அலைகளாகி மாறி கரை தழுவிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்

அத்தனையும் மறந்து நாம் ஒரு பிணமென இருப்போமா எமது கடமையை செய்கவென காலம் உறுத்துகின்றது கதவுகள் திறக்குமென நம்பிக்கை சொல்கின்றது கூடி திரண்டு தட்டுங்கள் என வரலாறு உந்துகின்றது வாருங்கள் தமிழின நீதி கோருவோம் நெஞ்சங்களே

ஐநா நோக்கி நடப்போம் உரத்த குரலில் ஒன்று திரண்டு எங்கள் நீதியை கேட்போம்

தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம். எமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம்.

இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும், பங்கு கொள்ளவும், பங்களிக்க வைக்கவும்..

நன்றி

தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு – 06 62 84 6606
தமிழீழ மக்கள் பேரவை – 06 52 72 5867
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421

Updated: August 28, 2019 — 2:44 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *