தேரேறிய நல்லூர் கந்தன்…. ( காணொளி இணைப்பு ).!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தத் தேர் உற்சவம் இன்று காலை பல்லாயிரக் கணக்கான அடியார்களின் பங்கேற்போடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 24ம் ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் முருகப் பெருமானின் அருள்பெற யாழ். நோக்கி படையெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது புலம்பெயர்ந்த தமிர்களும் கந்தனின் ஆசிபெற கடல் கடந்து வந்துள்ளனர்.
இம்முறை திருவிழாவினை முன்னிட்டு கோயிலுக்கு செல்லும் நான்கு பிரதான நுழைவாயில்களிலும் விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
 
ஈஸ்டர் தின தாக்குதல் காரணமாக பாதுகாப்பு கெடுபிடிகள் இந்த முறை அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.
 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 6ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

Nallur 2019 Festival day 24 am

நல்லை நகர்கோர்விழா யாழ்ப்பாணப் பெருவிழா “புராதன அதி லட்சண சொர்ண சட்கோண சண்முக ரதபவனி” வீரம் செறி சங்கிலிய ராஜதனி சர்வ உன்னத மாநகரே ஶ்ரீ சண்முக சேத்திர நல்ல்லையம்பதி ஶ்ரீ வள்ளி தேவசேனதிபதி சமேத சண்முக பெருமானின் இதோற்சவ நிகழ்வு நடைபெறும் நாள் இந்த இருபத்தி நான்காம் திருவிழா இலட்சோப இலட்சம் மக்கள் இவ் விழாக்காண ஒவ்வொரு வருடமும் அந்த அழகன் குமரனை ஆயிரம் கண்கொண்டு காண பெருந்திரள் ஆக கூடி சண்முக பெருமானை சொர்ண சொருபமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே மிக பழமையும் பெருமையும் வாய்ந்த இரத்தின இரதத்தின் மீது ஆயிரம் கோடி சூரியன் எழுந்துவந்தால் எப்படி ஒளி வீசுமோ அப்படி பட்ட பெரொளியாக திகழும் சண்முகப்பெருமானை ஜன வெள்ளத்தின் மீது சுமந்து வந்து உலகம் எங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாக விழாக்கோலம் பூண்டு இருக்கும் நாள் தான் இந்த நல்லையம்பதி இரதோற்சவ தினம் ஆகும்அதிகாலையிலே உள்வீதியிலே ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோஜதம், அதோமுகம் என ஆறுமுகம் கொண்ட சண்முகப்பெருமானுக்கு ஆறுமணிகளும் ஓங்கி ஓங்காரமாய் ஒலிக்க வசந்தமண்டபம் என்று சொல்லப்படும் தேவசபையிலே சண்முகபெருமானை சர்வ அலங்கார சொரூபனாக அமரச்செய்து “ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க – வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க – செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் “இவ் மக்களை மேன்மையுறச்செய்ய ஆறு அடுக்குத்தீபங்கள் ஏந்தி அந்தணர்கள் தீப ஆராதனை காட்ட 6.15 மணியளவிலே சண்முகஷேத்திரத்தின் திரைவிலக்கி கந்தக்கடவுள் காட்சிதரும் தரிசனம் காணகண் கோடிவேண்டும்.வசந்தமண்டப பூஜை , ஸ்தம்ப பூஜை நிறைவுற்று சுவாமி உள்வீதியுலா இடம்பெற்று யாக தரிசனத்துடன் 7.00 மணியளவிலே மிதமான சூரிய ஒளியுடன் ஆங்காங்கே சிறு மழைச்சாரல் உடன் ஷண்முகப்பெருமான் சர்வலோகநாயகன் ஆக தேர் ஏற வரும் காட்சியை வருணிக்க இவ் உலகில் வார்தைகளே இல்லை. அழகன் என்றால் குமரன். குமரன் இத்தனை பேரழாகா என எண்ணதோன்றும் வகையில் இந்த சண்முக இரத ஆரோகணம் ஆனது அமைந்து காணப்படும். தொடர்ந்து ரதம் ஏறி சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ நல்லை நகர் வீதிதனில் மெது மெதுவாக வலம் வர ஒவ்வொரு கோபுர வாயில்களிலும் பூக்கள் தூவி சண்முகனை வரவேற்று வீதியுலா வரும் காட்சியானது மிகவும் அற்புதம்.ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒருமுகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒருமுகம்தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையைஉருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒருமுகம்தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்துஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

Gepostet von nalluran.com am Donnerstag, 29. August 2019

அதனைத் தொடர்ந்து 25 நாட்கள் பல்வேறு திருவிழாக்கள் இடம்பெற்றன. மேலும் இன்றைய தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து நாளை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Updated: August 29, 2019 — 9:06 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *