புலிக்கொடி ஏற்றி திருமணம் செய்த புதுமணத் தம்பதியர்.!

தமிழ்நாட்டில் ஊத்தங்கரை என்ற இடத்தில் உள்ள தள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தமது திருமண நிகழ்வின்போது தமது ஊரில் புலிக்கொடி ஏற்றியதுடன் மரக் கன்றுகளையும் நாட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் தேசியக் கொடியான புலிக்கொடி தாயகத்திலும் தமிழகத்திலும் உலகம்  முழுவதும்  வாழும் தமிழ் மக்களின் நேசிப்பிற்கும் பூசிப்பிற்கும் உரிய கொடியாக மாறியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கான இனத்துவ அடையாளங்களை ஏற்படுத்தி, தமிழர்களின் அரசுக்கான அடிப்படைகளையும் உருவாக்கியிருக்கின்றது.

அந்த வகையில், தமிழர்களின் தேசியக் கொடியாக புலிக்கொடி சர்வதேசம்  முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியும் புலிக்கொடியை தமது கட்சிக் கொடியாகப் பயன்படுத்தி வருகின்றது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் பாலகிருஷ்ணன் தம்பதியினர் புலிக்கொடி ஏற்றித் திருமணம் செய்த செயற்பாடு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. ஈழப் போராட்ட ஆதரவாளரான அவருக்கு அவரது நண்பர்கள் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் திருவுருவப் படத்தை வழங்கியிருக்கின்றனர்.

ஊரில் புலிக்கொடி ஏற்றிய புதுமணத் தம்பதிகள் மரக் கன்றுகளையும் நாட்டினர்.

Updated: September 4, 2019 — 10:08 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *