தமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே !! ( காணொளி இணைப்பு ).!!

தமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே !!  

ஈழத்தில் தமிழர்களுக்கு சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை வரை கடந்த 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழின நீதி கோரும் நடைப்பயண தமிழின உணர்வாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்று 9வது நாளாகவும் துறோவா நகரில் இருந்து புறப்பட்டு நீண்ட விவசாய நிலங்கள் தொடர்ந்து பெரும் அடர்ந்த காட்டு வீதி வழியாக தமது பயணத்தை இன்று தொடர்ந்து வருகின்றனர்.

இன்று தமது பயணத்தின் போது இன்றைய நாளில் 2013ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி புலம்பெயர் மண்ணில் தீக்குளித்து உயிர் நீத்து தன்னுயிரை தியாகம் செய்த ஈகைப்பேரொளி செந்தில்குமரனையும் தங்கள் மனதில் நினைவு கூர்ந்து வணக்கம் செய்தபடி இதுவரை தமிழீழ விடுதலைக்கான தங்கள் உயிர்களை ஈகம் செய்தவர்களின் கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி வேட்கையுடன் வேகமாக ஐநா ஜெனிவா நோக்கி விரைகின்றனர்.

இந்த நீதி கோரும் பயணத்தின் போது புலம் பெயர் ஈழத்து இளைய தலைமுறை இன உணர்வு மிக்க மாணவர்களும் இளைஞர்களும் சிலர் இணைந்து கொண்டு நடைப்பயணத்தை தொடர்கின்றனர்.

Updated: September 5, 2019 — 1:35 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *