காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய மற்றுமொரு தந்தையார் முல்லைத்தீவில் உயிரழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் வட தமிழீழம் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளார்.
 
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 900 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது இன்று 912 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 
Updated: September 5, 2019 — 1:19 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *