தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 3 ம் நாள்.!

தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 3 ம் நாளான இன்று Ciney மாநகரத்தில் இருந்து Arlon மாநகரத்தை 108 km கடந்து வந்தடைந்தது. 

Arlon மாநகரத்தின் நகரபிதா மற்றும் அவ் ஊள்ளூர் ஊடகமாய் இருக்கிற la Meuse பத்திரிகையினையும் சந்தித்து எமது தேசத்தில் தமிழீழ மக்களுக்கு இழைக்கப் பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் முகமாக மனித நேயச் செயற்பாட்டாளர்கள் 3 ம் நாளாகவும் 18 ஆவது தடவையாகவும் இந்த அறவழிப்போராட்டத்தினை பல இடையூறுகளுக்கு மத்தியில் இயற்கையோடு போராடி ஒரு விடுதலைச் செய்தியினைச் சுமந்து வந்ததனையும் தெளிவு படுத்தி இருந்தோம்.

குறிப்பாக 10 ஆண்டுகள் கடந்து , இன்னும் எம் மக்கள் ஒரு மாற்றுவடிவம் பெற்ற இனவழிப்புக்குள் தங்களை முகம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதையும் 2009 ம் ஆண்டு மிகக் கொடூரமாக இழைக்கப் பட்ட இனவழிப்புக்கான அனைத்துல சுயாதீன விசாரணை வேண்டும் என்பதையும் , அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக்கோரியும் , தமிழர்களுக்கு எவ்வித அடக்குமுறையும் அற்ற தனித் தமிழீழமே தீர்வு எனபதையும்… மாநகரசபையில் கோரிக்கைப் படிவாமாக கையளிக்கப் பட்டது.

தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 3 ம் நாள்.!

தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 3 ம் நாள்.!

Gepostet von சின்னவன் / SiNnavan-MPK am Samstag, 7. September 2019

குறிப்பாக இன்று Arlon மாநகரம் 1944 ல் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்று இன்று 75 ஆம் ஆண்டுக் கொண்டாடத்தில் அம் மாநகரமே இருக்க, நகரபிதா எம் அழைப்பை ஏற்று பல ஆதரவு வார்தைகளையும் நம்பிக்கை வாக்குறுதிகளையும் தந்தது மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுத்தது. மற்றும் இதே போன்று எம் தேசத்தின் விடுதலை நாளை கொண்டாட விரைவில் நாள் கூடி வரும் எனவும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள்.

நிறைவாக நீதிக்கான மனிதநேய மிதி வண்டிப்பயணம் 3 ம் நாளான இன்று Luxembourg நாட்டின் எல்லையில் இனிதே நிறைவு பெற்று. நாளை Germany நாட்டை நோக்கி விரைய இருக்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

Updated: September 7, 2019 — 7:43 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *