தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat மாநகர சபை உதவி நகரபிதாவிடம் எமது தாயகத்திலே தொடர்ச்சியாக எம் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களையும் , 2009 ம் ஆண்டின் பேரவலமாய் இருக்கின்ற தமிழின அழிப்பு பற்றியும் விளக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் கடந்தும் எவ்வித நீதிக்கான முன்னேற்றமும் இன்றி ஒரு மூர்க்கத்தனமான இனச்சுத்திகரிப்பே தொடர்ந்தும் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது என்பது பற்றியும் தமிழினவழிப்பிற்கு இலங்கை அரசு நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும் என்பது சார்ந்தும், அனைத்துலக சுயாதீன விசாரணையின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் பல இதர விடயங்களும் மனித நேய ஈருருளிப் பயணப் போராளிகளால் விளக்கப்பட்டது.

தொடர்ச்சியாக Sélestat மாநகரசபையின் காலை உணவு உபசரிப்பின் பின் ஆரம்பித்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக Colmar மற்றும் Mulhouse நகரபிதாவையும் Alsace மாநில முதல்வரையும் சந்தித்து எமது ஐந்தம்ச கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு Alsace மாநிலப் பத்திரிகையுடனும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக 110Km கடந்து Swiss நாட்டனை வந்தடைந்தது. முக்கிய குறிப்பாக London மாநகரத்தில் வருகின்ற 14.09.2019 அன்று, ஐக்கிய நாடுகளில் நடைபெற இருக்கின்ற 42 வது கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஈருருளிப்பயணப் போராட்டமும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

Updated: September 12, 2019 — 2:53 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *