தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவேந்தல் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் !

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்ப நாள் நிகழ்வுகள் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.

16.09.2019 – 25.09.2019 ஆம் திகதி வரையான நிகழ்வுகள் தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி நாள் நிகழ்வுகள் 26.09.2019 ஆம் திகதி தியாக தீபம் வீரச்சாவடைந்த நல்லூரின் வடக்கு வீதியில் காலை 10.48 மணிக்கு ஆரம்பமாகும்.

எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை இம் மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரனை நினைவு கூரும் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
பொன் குணரத்தினம்
ஒருங்கிணைப்பாளர்

தொடர்புகளுக்கு : 0765371949

Updated: September 13, 2019 — 4:48 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *