பிரித்தானியாவிலும் தொடங்கியது ஈருறுளிப் போராட்டம்..

ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், தமிழின அழிப்புக்கு நீதிகோரியும் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நோக்கி இன்று ஐந்து பிராந்தியங்களிலிருந்து ஈருறுளிப் போராட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 14ஆம் திகதி சனிக்கிழமை 4.00 மணிக்கு மக்களை அணிதிரளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐந்து அணியாக லண்டன் முழுவதும் ஈருறுளி விழிப்புணர்வு போராட்டத்தில்  ஈடுபடுபவர்களும் பிரதமர் (Downing Street) அலுவலகத்தை மாலை 4.00 மணிக்கு வந்தடைவார்கள்.ஈழத்தில் போராடும்  மக்களுடைய கரங்களை பலப்படுத்தி,

எமது உரிமைகளை நாம் வென்றேடுப்போம் !!

தொடர்புகளுக்கு
020 3371 9313 /07448 216826
www.tccuk.org

Updated: September 14, 2019 — 9:25 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *