இவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..

இவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..

இவர்கள் சிங்கள சேவகன் ( கைக்கூலி ) வடமாகான ஆளுநரை சந்தித்தது..??
சிங்கள சேவகனிடம் கைகுலுக்கி புத்தர் சிலைகளை பரிசாக பெறுவது..??

இது எந்த வகையான சந்திப்பு ? விருந்து ? எது ??

சரி பாடல் போட்டியை தான் தொடக்கி வைத்து இருக்கிறார்கள்..?? இது ஒரு வகை வளர்ச்சி ? அதை தடுக்கிறார்கள் என்கிறார்கள் சிலர் ?

வசந்தம் தொலைகாட்சி, வானொலி என்பவை, நேரடியாக சிங்கள அரசின் கீழ் இயங்கும் ஒரு ஊடக வலையமைப்பு, வசந்தம் தொலைகாட்சியின் ஏற்பாட்டில் தான் பாரதிராஜா, அமீர் அவர்களின் வருகை….

ஈழ மக்களுக்கே ஏன் எமது போராளிகளுக்கே கிடைக்காத அரிய வாய்ப்பு இந்த பாரதிராஜாவுக்கு கிடைத்தது, எமது தேசியத்தலைவரை சந்திக்கும் வாய்ப்பு….

உங்கள் இருவர் மீது இன்றும் மதிப்பும், மரியாதையும் உள்ளது, நீங்கள் எமக்காக செய்த தியாகங்கள் உண்டு, நாம் மறக்கவில்லை…. நீங்கள் ? இன்று ?

இன்றும் ஈழத்திலும், புலத்திலும், தமிழ்நாட்டிலும், ஈழ விடுதலை போராட்டம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது… எதுவும் முடிந்து விடவில்லை….

நீங்கள் சென்று விருந்துண்டு பரிசு பெற்ற இடத்துக்கு அருகில் தான் உணவின்றி, தூக்கமின்றி, காணாமல் போனவர்களின் உறவுகள் இன்றும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஏன் ஒரு தடவை சென்று பார்க்கவில்லை ?

ஒரு வேளை நினைவு வரவில்லை போலும்…. இருக்கலாம்….

ஆனால் என்றும் எமது நினைவில் உண்டு அனைத்தும்….

நன்றி

Updated: October 6, 2019 — 6:21 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *