உயிர் ஒன்று மெய் இரண்டு .!

உயிர் ஒன்று மெய் இரண்டு .!

■கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன்

உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது

‘கார் இன் பணியின் தாக்கம்………

அவனது சாவின் காரணி ——–அவையல்ல

இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல்,

தேறுதல் ஆக உணர்வுகளின் சங்கமம்.

ஒரு பெயரில் பலர் இருப்பது ஒன்றும்புதினமல்ல, இருப்பினும் எம்மில்

புலனாய்வுத்துறையில் பலரில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பெயர் கார்வண்ணன். செல்லமாக ‘கார்இரண்டு கார்வண்ணனும் வெவ்வேறு

பணியாக ஒரே பணிக்களத்தில் ஒரே நாட்களில் வவுனியாவில், நாமே உணராது

வந்தமைந்து பொருந்திய நிலமையிது.

இருவரினதும் மூத்த சகோதரர்கள் இயக்க உறுப்பினர்கள். அவர்கள் இருவரும்

இங்கு போர்க்கத்தில். போர்க்களமருத்துவப் பணியில் மருத்துவர்களாக,

எப்போதும் எவராலும் திட்டமிட்டு தீர்மானிக்கப்படாமலேயே ஒன்றன் மேல்

ஒன்றாய் வந்தமைந்த பொருத்தங்கள்இயற்கை தன்பாட்டில் அமைத்ததோ? இந்த வினோதப் பொருத்தங்கள்.

வீரச்சாவு கார்வண்ணாம்……

டொக்டரின் தம்பியாம்…….. செய்தி பரவி,

தமையன்மார் காதிலும் எட்டியது.என்னதான் இயக்கம் என்ற போதும்

என்னதான் போர்க்கள வைத்தியர்கள் என்ற போதும்……உயிர் வாழ்வுக்கும் சாவுக்கும்இடையேயான கணங்களை கண்டும்.கணக்கிட்டும் பழபகியவர்தான் என்றபோதும் இது தம்பியல்லவா என் தாயின்வயிற்றிலேயே உதித்த இரத்த உறவல்லவா.

முதலில் மற்ற கார்வண்ணனின் தமையன் வந்து விபரம் கேட்க வீரச்சாவு

உங்கள் தம்பியில்லை அது “மற்ற டொக்ரரின் தம்பி” பதில் “என் தம்பி வவுனியாவில் தான்நி ற்கின்றான் “வீரச்சாவு யார்? ஆள் பற்றி குறிப்புகள் சரியா? தவறா?

ஆய்வு:என் தம்பி இல்லையென்றால் என்நண்பனின் தம்பியல்லவா? என் தம்பி

இல்லையென்று ஆறுதலா? என் நண்பனின் தம்பியென்று அழுகையா?

முதலில் விபரம் கேட்க வந்த தமையனின் தம்பியல்ல என்று ஆனது .

இதற்கிடையில் மற்ற கார்வண்ணனின் அதாவது வீரச்சாவு அடைந்த கார்வண்ணனின் தமையனுக்கு செய்தி வரும் விபரம் பெற விரைவு:

அவருக்கும் குழப்பம் மற்ற டொக்ரரின் தம்பியா அல்லது எனது தம்பியா?

இன்னாரின் தம்பியான இந்த கார்வண்ணன்தான் வீரச்சாவு என

உறுதியாகிப் போனது.

“இரண்டு போராளிகள்”,

“இரண்டு வைத்தியர்கள்”

“இரண்டு கார்வண்ணன்களது தமையன்மார்”

ஆக இருவரும் சந்திப்பு.

“உங்கட தம்பிதான் டொக்ரர் வீரச்சாவு” உங்கட தம்பிக்கு பிரச்சினை

இல்லையாம் டொக்ரர்” ஒரே நேரத்தி ஒரே விடயம் ஆறுதல் செய்தியாகவும்,

தேற்றுதல் மொழியாகவும், மெதுவாய் ஒலித்தது. ஒன்றாய்க் கலந்து மெளனமாய்ஆனது இரண்டு கார்வண்ணன்களிடையே எல்லாமே பொருத்தம்தானா? பொருந்தாமை இல்லையா? உள்ளதே

ஒரு ‘கார் இன் அம்மா, அப்டா இங்கு

வன்னியில். மற்ற ‘கார் இன் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில்.

இது போன்ற விடயங்களில் யார்சொன்னது? ஏன் சொன்னது? எப்படிச்

சொன்னது என்ற எந்த புலனாய்வாலும்

கண்டறிய முடியாத தகவற் தொடர்புசெயற்படும்

வன்னியில் உள்ள அம்மா அப்பாவிற்கு செய்தி சென்றது. தங்கள் செல்வம்

வவுனியாவில் என்ற செய்தியை முன்னரேயறிந்து பதறியிருந்த நெஞ்சுகள்

வவுனியாவில் ‘கார்’ வீரச்சாவு” என்ற செய்தி கேட்டு அதிர்ந்தன.வேர்கள்.கொம்

உண்மையா? பொய்யா? என்று மேலதிக தகவல் தேட இடியாய் அடுத்த செய்தி

“இயக்கத்தில் இருக்கின்ற டொக்ரரின் தம்பி கார்வண்ணாம்”

“ஐயோ! மகனே” என்று அலறும்

நெஞ்சில் அடுத்த செய்தி.

“இல்லையாம், இது வேறொரு கார்

கார்வண்ணாம்

“இல்லையில்லை இயக்க டொக்ரரின்

தம்பியாம்

“மற்ற கார்வண்ணனின் தமையனும்

இயக்கத்தில் டொக்ரர் தானாம்

பெற்ற வயிறு எரிதலின் அதிர்வைத் தணிக்கும் சமாளிப்பா? அல்லது

உண்மைதானா?

சர்வதேச செஞ்சிலுவைக் கடிகாரமும் சிறீலங்காவின் படைத்துறை நாட்காட்டியும் வழமைபோல் கடமைப்படி நகர்ந்தன.

இங்கு கார்வண்ணனைச் சேர்ந்தோருக்கு நாட்கள்

இரக்கமில்லாததாகவும், மெதுவாகவும் நகர்ந்தன.

செஞ்சிலுவை தாங்கிய வாகனம் கார்வண்ணனின் புகழுடல் சுமந்து, புனிதம்

பெற்று நாம் மீட்ட எம்நிலம் தொட்டது அவனைச் சேர்ந்தோர் மத்தியில்

அவனை வழியனுப்பிய தோழர்கள் முன் ‘கார் இது வித்துடல் முன்வரிசையில்,

பதறும் மனத்துடனும்,துடிக்கும் வயிற்றுடனும் அப்பாவும் அம்மாவும்.

அது வன்னியில் இருந்த அம்மா, அப்பா இரண்டு கார்வண்ணனில் ஒரு கார்

வண்ணனை சுமந்து பெற்ற அம்மா அப்பா….!

-நினைவுப்பகிர்வு:- ச. பொட்டு அம்மான்.

எரிமலை இதழிலிருந்து ..

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Updated: April 18, 2020 — 11:19 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *