இலங்கை மீது ராணுவ தடை விதியுங்கள்!

இலங்­கை­யில் கணி­ச­மான முன்­னேற்­றம் ஏற்­ப­டும் வரை இலங்கை மீது இரா­ணு­வத் தடை­களை விதிப்­ப­தற்கு ஐ.நா. பாது­காப்­புச் சபையை வலி­யு­றுத்­து­மாறு ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யைக் கோரும் தீர்­மான வரைவு வடக்கு மாகாண சபை­யில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் அடுத்த அமர்­வில் எடுத்­துக் கொள்­வ­தற்­காக, உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தீர்­மான வரை­வி­லேயே மேற்­படி விட­யம் கூறப்­பட்­டுள்­ளது.

அந்­தத் தீர்­மான வரை­வில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கை­யில் ஐக்­கிய நாடு­கள் மனித உரிமை சபை­யின் தீர்­மா­னங்­களை இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­மை­யி­னா­லும், இலங்கை மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மா­னங்­களை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்கு முன்­னர் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தத் தவ­று­மா­யின் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தன் பொருட்டு அல்­லது சிறப்­பாக உரு­வாக்­கப்­ப­டும் இலங்­கைக்­கான பன்­னாட்டு நியாய சபை­யில் முற்­ப­டுத்­து­வ­தன் பொருட்டு, இலங்­கையை ஐக்­கிய நாடு­கள் பாது­காப்­புச் சபைக்கு கொண்­டு­வ­ரு­தல் வேண்­டும் என்று ஐக்­கிய நாடு­கள் மனித உரி­கைள் சபையை இந்­தச் சபை­யா­னது கோரு­கின்­றது.

போரி­னால் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் நிலை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர், தமிழ் அர­சி­யல் கைதி­கள், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் தொட­ரும் கட்­டுப்­பா­டில்­லாத தடுத்து வைப்பு, தமிழ்ப் பிர­தே­சங்­க­ளில் பெரு­ம­ள­வி­லான பாது­காப்­புப் படை­கள் நிலை­கொண்­டுள்­ளமை மற்­றும் தமிழ் மக்­க­ளின் சொந்­தக் காணி­க­ளில் இலங்­கைப் பாது­காப்­புப் படை­கள் தரித்­தி­ருக்­கின்­றமை ஆகி­ய­வற்­றைக் கண்­கா­ணிப்­ப­தன் பொருட்டு இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­க­ளின் சிறப்பு அறிக்­கை­யி­டும் பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் பேர­வையை இந்­தச் சபை­யா­னது கோரு­கின்­றது.

போர்க்­குற்­றங்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட இலங்கை இரா­ணு­வத்­துக்கு நுழை­வுச் சான்றை நிரா­க­ரிக்­கு­மா­றும் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் தனது அறிக்­கை­யில் முன்­மொ­ழிந்­த­மைக்கு அமை­வாக, பன்­னாட்டு நியா­யா­திக்­கத்­தின் பிர­யோ­கம் அடங்­க­லாக ஏனைய வழி­மு­றை­களை ஆரா­யு­மா­றும் உலக நாடு­களை இந்­தச் சபை­யா­னது கோரு­கின்­றது – என்­றுள்­ளது.

Updated: August 27, 2018 — 2:19 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *