Category: தமிழீழ செய்திகள்

உறவுகளை தேடியலைவோர் உயிரிழக்கும் சோகம் : மகனை தேடியலைந்த தந்தையொருவர் உயிரிழந்தார் !!

வடதமிழீழம்: வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தமது மகனைத் தேடி சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் இன்றுடன் 913 ஆவது நாளை எட்டியுள்ளது இந்நிலையில் தனது மகன் அச்சுதன் வயது 26 கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் கையை உயர்த்தி ஒப்படைக்கப்பட்ட தனது மகனை […]

தமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் !! ( காணொளி )

தமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் !!

கிளிநொச்சியில் சிங்கள தற்காப்புக்கலைக் கிராமம் உருவாக்கம்! – தொடரும் நில அபகரிப்பு !!!!

தமிழர் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இலங்கை இனப்படுகொலை  இராணுவம் முனைப்பாக செயற்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியான கிளிநொச்சியில் இலங்கை இனப்படுகொலை  இராணுவத்தினால் சிங்கள தற்காப்புக் கலை கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த வாரம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌத்த பிக்குவின் ஆசீர்வாதத்துடன் இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தின் அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவ வலைத்தளத்தின்படி இந்தக் கிராமம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் […]

கன்னியாவில் மக்களின் பிதிர்க்கடன் கிரியை குழப்பும் பேரினவாத பிக்குகள்

ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் மக்கள் பிதிர்க்கடன் செலுத்தினர். கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்துக்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரியை நிலையத்தில் அந்தனர்களுக்கு தானம் வழங்கினர். அதேவேளை சிவாலயத்துக்கு முன்னால் உள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த துறவிகளின் வழிகாட்டலில் அதிஸ்டான பூசை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல் […]

சிங்கள அரசின் கப்பலோட்டிகளாக கடற்புலிகளை நியமிக்க கோருகிறார் சிறிதரன்.!

வட தமிழீழம் , யாழ்.மாவட்டத்தின் தீவகப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடும் கபல்களின் சாரதிகளுக்கான வெற்றிடத்திற்கு கடற்புலிகளின் இருந்தவர்களை பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக் கொண்டுள்ளார். வட  தமிழீழம் , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சமுத்திர பல்கலைக்கழகங்களின் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் […]

தமிழர்களின் வயிற்றிலடித்து சிங்கள வனஜீவராசிகள் திணைக்களம்.!

வட தமிழீழம் , யாழ்.மருதங்கேணி – கேவிலில் வசிக்கும் 120 குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ள எழுவரைகுளத்தினை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு சம்பாதித்து சுகபோகங்களை அனுபதிவித்து வருகின்றார்கள். இக்; குற்றச்சாட்டுத் தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் அப்பகுதி மீனவர்களால் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு, 120 குடும்பங்களுக்குமான வாழ்வாதார கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி – கேவில் பகுதியில் உள்ள எழுவரைகுளத்தினை சூழ உள்ள […]