இராணுவ புலனாய்வாளர்களை கொண்டு மக்களை அச்சுறுத்தும் வனவள திணைக்களம்!

வட தமிழீழம், வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களாகிய காஞ்சூர மோட்டை காட்டுப்பூவரசங்குளம் நாவலர் பாம் ஆகிய தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களில் அம்மக்கள் குடியேறுவதற்கு வன இலாகா அதிகாரிகளும் இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக தடையேற்படுத்தி வருகின்றார்கள்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இப்பகுதியில் ஏலவே குறிப்பிட்ட சில குடும்பங்கள் தமது நிலங்களில் குடியேறியுள்ளபோதும் பல குடும்பங்கள் தமது நிலத்தில் மீளக்குடியேற கடும் சிரமத்தினை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றார்கள்.

இன்று காலை தமது நிலங்களைத்துப்பரவு செய்வதற்கு சென்ற சில குடும்பங்கள் இது உங்களுடைய காணி இல்லை என்று வன இலாகா அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

குறித்த விடயங்களைச் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் ரூபன் மக்களது பிரச்சினைகளை பதிவு செய்து கொண்டிருந்த போது, வன இலாகா அதிகாரிகளினால் இராணுவப்புலனாய்வாளர்கள் அழைக்கப்பட்டதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் ராணுவப்புலனாய்வாளர்கள் ஔிப்படங்களையும் ஔிப்பதிவுகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.

தமது பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் குடியேற முடியாமல் தொடர்ச்சியாக நிர்க்கதிநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

Updated: August 31, 2018 — 3:55 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *