ஜெனீவா செல்ல காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு விசா மறுப்பு!

 

வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் 557 ஆவது நாளாக போராட்டம் நடத்திவரும் வேளையில் 13.09.18 அன்று போரட்ட கொட்டகையில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் காணாமல் போனவர்கள் 39 ஆவது ஜெனீவா கூட்டத்தொடர் தொடங்கப்பட்ட நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் நாங்கள் கலந்து சாட்சியமளிக்க முடியவில்லை ஶ்ரீலங்கா அரசினால் விசா மறுக்கப்பட்டுள்ளது.

இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்ட உறவுகளுக்கும் மிகவும் மன அழுத்தத்தினை கொடுத்துள்ளது பயத்தினை கொடுத்துள்ளது

குற்றம் புரிந்த இரணுவத்திற்கு விசா கொடுத்து அவர்களை அனுப்பி எங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயம் காணாமல் போனவர்கள் அலுவலகம் நீண்டகாலமாக வேண்டாம் என்றே சொல்லி வருகின்றோம் வெளிநாட்டு நிறுவனங்களும் காணாமல் போனவர்களின் அலுவலத்தினை திணித்துக்கொள்கின்றார்கள் இதனால் கிடைக்கும் எந்த தீர்வும் வேண்டாம் இதனை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.

ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து போராடிவரும் இந்த வேளையில் அரசும் அரசு சார்ந்தவர்களும் அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்கவேண்டும் நாங்கள் சிறுபான்மையான மக்கள் என்ற நிலைப்பாட்டில் அவர்களின் கருத்துக்கள் செல்கின்றது.

எங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எங்களின் உறவினை மீட்க சர்வதேசம் உதவவேண்டும் இலங்கை அரசின் காணாமல் போனவர்கள் அலுவலத்திற்கு சர்வதேசம் துணைபோகாமல் எங்களுக்கு ஆதரவினை தந்து நீதியினை பெற்றுக்கொடுக்கவேண்டும். வெளிநாடுகளில் வாழ்கின்ற எங்கள் சமூகத்தினை நாங்கள் கேட்கின்றோம் எங்கள் உறவுகளை மீட்க நீதி கிடைக்க புலம்பெயர் தமிழர்கள் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் எங்கள் நிலையினை உலகிற்கு தெரிவிக்கவேண்டும் என்று உங்களிடம் நாங்கள் கையேந்தி நிக்கின்றோம்

விசாமறுப்பு தெரிவித்த மனவேதனையில் நாங்கள் இருக்கின்றோம் எங்கள் நியாயம் கேட்பதற்கு எந்த நாட்டிற்கு செல்வதற்கும் எங்களுக்கான ஒரு சூழலை அமைத்து தர வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

எங்களுக்கு ஶ்ரீலங்கா அரசின் காணாமல் போனவர்கள் அலுவகத்தின் ஆறாயிரம் ரூபா மாத கொடுப்பனவு வேண்டாம் அவர்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது இந்த அலுவலகத்தினை நாங்கள் முழுமையாக புறக்கணிக்கின்றோம் இந்த அலுவலகத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை இந்த இடத்தில் சுட்டி நிக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

Updated: September 14, 2018 — 4:13 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *