அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒன்று படுங்கள் : மகாவலி குடியேற்றத்தை தடுக்க மனோ அழைப்பு

அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒன்று படுங்கள் : மகாவலி குடியேற்றத்தை தடுக்க மனோ அழைப்பு
 
மகா­வலி எல் வல­யம் என்ற போர்­வை­யில் இடம்­பெ­றும் திட்­ட­மி­ட்ட சிங்­கள குடி­யேற்­றங்­களை தடுக்க நாட்­டில் உள்ள அனைத்து ­தமிழ்ப்­பி­ர­தி­நி­தி­க­ளும் ஒன்­று­ப­ட­வேண்­டும். என அரச கரும மொழி அமைச்­சர் மனோ­க­ணே­சன் அழைப்பு விடுத்­துள்­ளார்.
 
சுண்ணாகம் ஸ்கந்­த­வ­ரோ­தய கல்­லூ­ரி­யின் முன்­னாள் அதி­பர் வி.சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம் அவ­ரக்­ளின் நினைவு பேருரை நிகழ்வு அதிபர் மு. செல்வஸ்தான் தலைமயில் நேற்று இடம்­பெற்­றது.இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இதனைத் தெரி­வித்­தார்.அவர் அங்கு தெரி­வித்­த­தா­வது, மகா­வலி எல் வல­யம் என்ற போர்­வை­யில் அடாத்­தாக சிங்­க­ளக் குடி­யேற்­றம் இடம்­பெ­று­கி­றது. வன­ இ­லா­கா­வி­ன­ரு­டன் தொல்­லி­யல்த் திணைக்­க­ளத்­தி­ன­ரும் மிக வேக­மா­கப் பெரும்­பான்­மை­யி­ன­ரின் குடிப்­ப­ரம்­ப­லைத் திணிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.
 
வடக்கு ஆளு­நர் தலை­மை­யி­லும் கிழக்கு ஆளு­நர் தலை­மை­யி­லும்­ வ­டக்­கு­ கி­ழக்­கு நாடா­ளு­ம­னற உறுப்­பி­னர்­க­ளை­யும் துறைக்­குப் பொருத்­த­மான அமைச்­சர்­க­ளை­யும் இணைத்­துக் கலந்­து­ரை­யா­டித் தீர்வு காணு­மாறு அர­ச­த­லை­வர் பணித்­துள்­ளார்.இந்­தப் பட்­டி­ய­லில் தொல்­லி­யல்த் திணைக்­க­ளத்­தி­ன­ரை­யும் இணைத்­துக்­கொள்­ளு­மாறு நான் அரச தலை­வ­ரி­டம் வலி­யு­றுத்­தி­னேன். அதனை அவர் ஏற்­றுக்­கொண்டு அதற்கு உடன்­பட்­டார்.
 
அடாத்­தாக குடி­யேற்­றும் இந்­தத் திட்­ட­மிட்ட காணி அப­க­ரிப்­பைத் தடுத்து நிறுத்த வேண்­டிய கட்­டா­யம் வடக்­கி­ழக்­குத் தலை­மை­க­ளுக்கு உண்டு. அவர்­க­ளு­டன் இணைந்து அர­ச­க­ரும மொழி­கள் மற்­றும் தேசிய நல்­லி­ணக்க அமைச்­ச­ரா­கிய நானும் சேர்ந்து போரா­டத் தயா­ராக இருக்­கி­றேன். இந்த பேரி­ன­வா­தச் செயற்­பாட்­டைத் தடுத்து நிறுத்த நாம் ஒற்­று­மைப்­ப­ட­வேண்­டும் வடக்­கு­கி­ழக்கு மட்­டு­மன்றி கொழும்பு- மலை­ய­கம் என அனைத்­துத்­த­மிழ்ப்­பி­ர­தி­நி­தி­க­ளும் ஒன்­று­ப­ட­வேண்­டும்.
 
கடந்த காலங்­க­ளில் நான் இது தொடர்­பாக தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு உட்­பட வடக்­கு­கி­ழக்­கு நா­டா­ளு­ம­ன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னும் பேரி­ன­வா­தக் கட்­சி­க­ளில் உள்ள தமிழ் நாடா­ளு­ம­னற உறுப்­பி­னர்­க­ளு­ட­னும் பேசி­யி­ருந்­தேன் – என்­றார்.
Updated: October 11, 2018 — 9:48 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *