தமிழர் வரலாற்றில் மே மாதம்.!

இனப்படுகொலையின் உச்ச நாள் தமிழீழம் சிதைத்து அழிக்கப்பட்ட நாள்:

18.05.2009 அன்று சர்வதேச நாடுகளின் துணையுடன் தேசத் துரோகிகளினதும் தமிழீழ விரோதிகளினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பொய்மைபுனைந்து உலகை ஏமாற்றி தன்னை நியாயப்படுத்தியபடி வீரமிக்கதமிழீழ தேசத்தை சிங்கள இன வெறியரசு கோழைத்தனமாகஆக்கிரமித்துக்கொண்ட நாள். 21-ம் நூற்றாண்டில் மனிதம் அதன் உரிமைகள் பற்றிய புதிய கருத்தேற்றங்கள் சபைகள்தோறும் நிறைந்து விரவிக்கிடக்க லட்சக்கணக்கான தமிழர்களை பலிகொண்டு பல்லாயிரம் தமிழர்களை அங்கவீனர்களாக்கி மூன்று இலட்சத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்களை கைதிகளாக்கி அடைத்து வைத்தபடி தமிழீழத்தை சிங்கள தேசம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது.

தமிழினப் படுகொலை ஆரம்பம்:

22.05.1958 அன்று ஒரு தொடருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 500ற்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்களக் காடையர்கள் தாக்கி இனக் கலவரத்தை ஆரம்பித்தனர். அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர்.டி, பண்டாரநாயக்காவினது குண்டர்களாலும், சிங்களக் காவல்துறையினராலும் தமிழர்களது வீடுகள், உடமைகள் யாவும் அழிக்கப்பட்டன. 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் சூட்டப்பட்ட நாள்:


1972ம்  ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களினால் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில்  உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வந்த புலிகள் இயக்கம் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ எனப் பெயர் மாற்றம் பெற்று இயங்கத் தொடங்கிய நாள்05.05.1976 ஆகும்.

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாள்:

மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலுக்கென வந்திருந்த அமைச்சர்களான காமினி திசநாயக்கா மற்றும் சிறில் மத்திய முதலானவர்கள்தலைமையிலான சிங்களக் காடையர்களால் தமிழ் மக்களின் பண்பாட்டு அறிவுப்பெட்டகம் 31.05.1981 அன்று தீமூட்டி எரிக்கப்பட்டது.தென்னாசியாவிலேயே அதிக நுால்களைக் கொண்டதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பண்டைய நூல்களையும் ஏட்டுச் சுவடி களையும் கொண்ட அழகிய அரிய கலைக்கருவூலத்தை சிங்களக்காடையர்கள் எரியூட்டி, சிங்களத்தின் எண்ணம் தமிழின அழிப்பு ஒன்றையே நோக்காகக் கொண்டது என்பதை புலப்படுத்தினர்.

கந்தர் மடம் வாக்குச்சாவடித் தாக்குதல்:

18.05.1985 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது கந்தர்மடம் தேர்தல் சாவடியில் காவலில் ஈடுபட்ட  சிங்கள இனவாத இராணுவத்தினர் மீதும், இனவாத பொலிசார் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 10 நிமிட அதிரடித்தாக்குதலில் இராணுவக் கோப்ரல் ஜெயவர்த்தனா கொல்லப்பட்டான்.ஒரு இராணுவக் கோப்ரலும், 2 பொலிசாரும் காயமுற்றனர்.

லெப்டினன் சீலனைக் காட்டிக்கொடுத்த பொலிஸ் அதிகாரி அழிப்பு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலணித் தளபதியான லெப்டினன் சீலனின் மறைவிற்குக் காரணமாக விளங்கிய இனத்துரோகி பொன்னையா சுப்பிரமணியம் 04.05.1984 அன்று மீசாலையில் வைத்து விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மன்னார் பொலிஸ் நிலையத் தகர்ப்பு:

10.05.1985 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலணிகளால் மன்னார்பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. வெற்றிகரமாக நடந்து முடிந்த இத்தாக்குதலின்போது, மன்னார் பொலிஸ் நிலையத்தின் ‘7 கட்டிடங்கள்தகர்க்கப்பட்டன. பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன, பல பொலிசார் கொல்லப்பட்டனர்.

வல்வெட்டித்துறைப் படுகொலை:

09.05.1985 அன்று வல்வெட்டித்துறை நகர் பகுதியை சுற்றிவளைத்தசிறிலங்காப் படையினர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50 பொதுமக்கள், பொது நூல்  நிலையத்தினுள் அடைத்துவைக்கப்பட்டுகுண்டுவைத்துக் கொல்லப்பட்டனர், தெருக்களில் வைத்தும் பொது  மக்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். எல்லாமாக 90 பொது மக்கள் ஜே.ஆரின் ஆயுதப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

சிங்களப் படை அதிகாரி மேஜர் சிறிலால் மெண்டிஸ்  பலி

12.05.1985 அன்று உடுப்பிட்டி பேருந்து நிலையத்தினுள் தமிழின அழிப்பிற்கென தயாராக இருந்த சிங்களப்படையினர். மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகுண்டுத் தாக்குதலில் மேஜர் சிறிலால் மெண்டிஸ் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.

வவுனியாவில் இந்தியச் சிறையுடைப்பு:

01.05.1989 அன்று வவுனியாவில் இருந்த இந்தியப் படையினரின் சிறையை உடைத்து அங்கிருந்த போராளிகளும் பொதுமக்களுமாக 42 பேர் தப்பினர். இச்சிறையுடைப்பு நடவடிக்கையில் இரு போராளிகள் உட்பட நான்கு தேசத்தின் புதல்வர்கள் வீரச்சாவடைந்தனர்.

அபித்தா கப்பல் தகர்ப்பு:

கடலில் பல போராளிகளினது அழிவுக்கும் பல பொதுமக்களது அவல இறப்பிற்கும் காரணமாக இருந்த அபித்தா கட்டளைக் கப்பல் 04,05.1991 அன்று கடற் கரும்புலிகள் கப்டன் ஜெயந்தனாலும், கப்டன் சிதம்பரத் தாலும் அழிக்கப்பட்டது.

குமுதினிப் படகு படுகொலை:

15.05.1985 நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்பாதையில் சென்ற 30-ற்கு அதிகமான பொதுமக்கள்  சிங்கள கடற்படையால் குமுதினிப் படகில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர்

தமிழீழ வைப்பகம் ஆரம்பம்:


23.05.1994 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளில், ஒன்றான தமிழீழவைப்பகம் திறந்துவைக்கப்பட்டது.

ஓயாத அலைகள்03 மே மாதத்தில் நகர்ந்த பாதை

10.05.2000 அன்று நாவற்குழிப் பாலம் மீட்கப்பட்டது. 11.05.2000 அன்றுதென்மராட்சிக் கோட்டத்தில் கோயிலாக்கண்டி தனங்கிளப்பு படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டன, யாழ். மாநகரை நோக்கிய நகர்வில் அரியாலைப் பிரதேசம், கொழும்புத்துறை இறங்குதுறைப் பகுதி கைப்பற்றப்பட்டது. 16.05.2000 அன்று தச்சன்தோப்பு நாவற்குழிப் பகுதி படை முகாம்கள் தகர்க்கப்பட்டன, ஒயாத அலைகள் 03 படையணிகளால் கைதடிச்சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தளம் விடுவிக்கப்பட்டது. 20.05.2000 ஓயாத அலைகள் -03 படையணிகளால் தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி மீட்கப்பட்டது.

Updated: May 1, 2019 — 6:52 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *