தமிழர் வரலாற்றில் ஜூன் மாதம் .!

சிங்களம் மட்டும் சட்டம்

05.06.1956 இல் எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் சிங்களம் மட்டும் என்னும் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டனர்.

அம்பாறைப் படுகொலை

அம்பாறையில் 1956 யூன் 10-11 ஆகிய இரு தினங்களில் 150ற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள அரசினாலும், அதன் கைக்கூலிகளாலும் கொன்றொழிக்கப்பட்டார்கள்,

தமிழீழ விடுதலைப் பாதையின் முதல் விதை

சிங்களப் பொலிசாரின் முற்றுகைக்குட்பட்டபோது,தியாகி சிவகுமாரன் அவர்கள் 05.06.1974 அன்று முதன்முதலாக தனது உயிரை விடுதலைப் போருக்காக விதையாக்கிக்கொண்டார்.

காரைநகரில் விமானத தகர்ப்பு

காரைநகர் பருத்தியடைப்பில் சிறீலங்கா கடற்படையினரின் விமானமொன்று 15.06.1984இல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது.

ஆறாம் கட் டை, தம்பலகாமம்,கட்டைபறிச்சான் படுகொலைகள்

26.06.1986இல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 6ஆம் கட்டை

என்னும் இடத்தில் 6 தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால்

வெட்டிக்கொல்லப்பட்டார்கள். அத்துடன் அங்கிருந்த 70ற்கும்

மேற்பட்ட கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்ட பின்னர் எரித்துச்

சாம்பலாக்கப்பட்டன. தம்பலகாமம் என்னும் இடத்தில் 30 தமிழர்கள்

சிங்கள ஊர்காவல் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர்

வில்ப்பத்து என்னும் இடத்தில் கொலைசெய்யப்பட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கட்டைபறிச்சான் என்னும்

இடத்தில் 30 பொதுமக்கள் இராணுவத்தினரால்

கைதுசெய்யப்பட்டார்கள். இவர்களில் 6 பேர் பின்னர்

இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார்கள்,

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பம்

சிறீலங்காவுக்கு எதிராக 10.06.1990இல் மீண்டும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.

கொண்டச்சி இராணுவ முகாம் தகர்ப்பு

மன்னாரில் சிங்களக் குடியேற்றங்களுக்கு ஒரு பகுதியில் காவலாய் இருந்த கொண்டச்சி இராணுவ முகாம் 21.06.1990 இல் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் பவள் கவச வண்டியொன்று

முதன்முதலில் கைப்பற்றப்பட்டது.

வந்தாறுமூலைப் படுகொலைகள்

ஆர்.பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் வந்தாறுமூலையில் சிறீலங்கா

இராணுவத்தினரால் 25 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டும்,

வெட்டியும் கொல்லப்பட்டனர். 08.06.1991 இல் நடைபெற்ற

இச்சம்பவத்தில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குப்பின் படுகொலை

செய்யப்பட்டனர்,

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்

12-13.06.1991 ஆகிய இரு தினங்களில் வீடுகள், பாடசாலைகள், அரிசி

ஆலைகளில் தங்கியிருந்த மக்களை சுட்டும் வெட்டியும், பாலியல்

வல்லுறவிற்குப்பின் படுகொலை செய்யப்பட்டுமென 185 தமிழர்கள்

கொல்லப்பட்டனர். சிறீலங்கா விசேட அதிரடிப்படையின்

இவ்வெறியாட்டத்தினால் கொல்லப்பட்டவர் தவிர 300 பேர்

படுகாயப்படுத்தப்பட்டும், 1500 பேர் வரை காடுகளுக்குள்

துரத்தப்பட்டனர்.

மண்டைதீவு அதிரடித் தாக்குதல்

மண்டைதீவில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது

ஆச்சரியமூட்டக்கூடிய வகையில், விடுதலைப் புலிகள் 26.06.1995

இல் நடாத்திய தாக்குதலில், இராணுவ லெப்.கேணல் உட்பட

110இற்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு

பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சுதந்திரபுரப் படுகொலைகள்

வன்னியின் சுதந்திரபுரம் எனும் இடத்தில் சிறீலங்கா

விமானப்படையினரின் கிபீர் குண்டுவீச்சு விமானங்களினாலும்,

ஆனையிறவு படைத்தளத்தில் இருந்து ஏவிய ஆட்லறி

செல்களினாலும் 29 தமிழர்கள் கொல்லப்பட்டனர், 10.06.1998 இல்

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடாத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான

செயலினால், 60 பேருக்குமேல் படுகாயமடைந்ததுடன்

பெறுமதிமிக்க சொத்துக்களும் வளங்களும் நாசமாகின.

Updated: June 1, 2019 — 9:13 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *