பூவக தாய் மண்ணில் பிறந்தோம் காயாகும் முன்னே உதிர்ந்தோம்..!!

நாம் சிந்திய குருதியால் எம் செந்தமிழ் ஈழம் நனைந்தது
வானம் மழையாக எறிகுண்டு பொழிந்தது உடல்கள் யாவும்….

தீபற்றி எரிந்தது இதை 
மறப்போமா நாம் மறப்போமா

எம் ஜனனமும் மரணமும்
குருதியால் நனைந்தது
பூவக தாய் மண்ணில் பிறந்தோம்
காயாகும் முன்னே உதிர்ந்தோம் இதை
மறப்போமா நாம் மறப்போமா

பிறந்தோம் தாய்மண்ணில்
புதைந்தோம் புதைகுழியில்
வசந்த கால பறவைகள் போல
வாழ்விடம் தேடி அலைந்தனர்
எம் உறவுகள் இதை
மறப்போமா நாம் மறப்போமா

இதயங்கள் சுமந்த வலிகள், இளமையில் சிதைந்த கனவுகள்
உயிரற்று போன உடல்களாய் உரிமையில்லா, பிணங்களாய் ஆனோம்

இதை மறப்போமா நாம் மறப்போமா

உலக நாடுகளின் வல்லாதிக்கம் உயிரற்று போனது எம் சுகந்திரம்
ஆயுதத்தின் ஆதிக்கம் அடிபணிந்து போனது எம் வாழ்வாதார வழிகள் எல்லாம் இதை
மறப்போமா நாம் மறப்போமா

சுகந்திர தேசத்திற்காய் சிறைகளில் சிறைப்பட்டு வதையுண்டோம் நாம்
தன்மான வாழ்வுக்காய் தற்கொடை ஆனோம்

விழிகள் சிந்திய நீருக்காய் உடல்கள் யாவும் தீயானது இதை
மறப்போமா நாம் மறப்போமா

உயிர்களை இழந்து உறவுகளை தொலைத்து
உணர்வற்று வாழ்வதா தமிழா

Updated: June 11, 2019 — 7:43 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *